அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி சென்றுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்!

Photo: Singapore Prime Minister Official Facebook Page

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் அரசுமுறைப் பயணமாக இன்று (12/12/2022) ஜெர்மனி நாட்டின் கியெல் நகரத்துக்கு (Kiel) சென்றுள்ளார். சிங்கப்பூர் பிரதமருடன் சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், மற்றும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை, பிரதமர் அலுவலகம் ஆகிய அமைச்சகங்களின் உயரதிகாரிகளும், கடற்படை அதிகாரிகளும் ஜெர்மனிக்கு சென்றுள்ளனர்.

வெளிநாட்டு பணிப்பெண்கள் துன்புறுத்தல்: சொல்லி எடுக்கும் வேலை ஒன்று, செய்ய சொல்வது ஒன்று

ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸை நேரில் சந்திக்கும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்டவைக் குறித்தும் விரிவாக ஆலோசிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 13- ஆம் தேதி வரை ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், சிங்கப்பூர் கடற்படையின் (Republic of Singapore Navy- ‘RSN’)
இரண்டு நீர்மூழ்கி கப்பல்களை வரும் டிசம்பர் 13- ஆம் தேதி அன்று அறிமுகப்படுத்தி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஜெர்மனி பிரதமர் பங்கேற்கவுள்ளார்.

போலீசாரிடம் பிடிபட்ட 376 நபர்கள் – தொடரும் விசாரணை

சிங்கப்பூர் பிரதமர் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சிங்கப்பூர் துணைப் பிரதமரும், நிதித்துறை அமைச்சருமான லாரன்ஸ் வோங் தற்காலிக பிரதமராக வரும் டிசம்பர் 12- ஆம் தேதி முதல் டிசம்பர் 16- ஆம் தேதி வரை இருப்பார் என்று சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.