“ஒட்டுமொத்தமாக இந்த பொதுத் தேர்தல் முடிவுகள் திருப்தி அளிக்கின்றன” – பிரதமர் லீ..!

PM Lee said that satisfied with the outcome of GE2020
PM Lee said that satisfied with the outcome of GE2020 (Photo: Ooi Boon Keong/TODAY)

ஒட்டுமொத்தமாக இந்த பொதுத் தேர்தலின் முடிவில் தாம் திருப்தி அடைவதாக பிரதமர் லீ ஹுசியன் லூங் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தேர்தல் முடிவுகள் பரந்த அடிப்படையிலான, மக்கள் செயல் கட்சிக்கு இருக்கும் ஆதரவைக் காட்டுகின்றன என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இதையும் படிங்க : GE2020: சிங்கப்பூர் பிரதமர் லீக்கு நரேந்திர மோடி வாழ்த்து.!

மக்கள் செயல் கட்சி ஆர்வலர்கள் மற்றும் வேட்பாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு தனது நன்றியை பிரதமர் லீ தெரிவித்தார்.

மேலும், புதிய அரசாங்கத்தின் பணிகள் அன்றைய தினமே தொடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி 61.24 சதவீத வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதாவது 93 நாடாளுமன்ற இடங்களில் 83 இடங்களைக் கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது.

இதையும் படிங்க : GE2020: ஜூரோங் குழுத்தொகுதியில் அதிக வாக்கு விகிதம் பெற்ற தர்மன் சண்முகரத்னம் அணி..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg