“சிங்கப்பூர் – இந்தியா நெருக்கமாக இணைந்து செயல்படுவதை எதிர்நோக்குறேன்” – பிரதமர் லீ..!

(Photo by @MEAIndia)

சிங்கப்பூரில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பிரதமர் திரு. லீ சியன் லூங் அவர்களுக்கு வாழ்த்து கூறி இந்திய பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்து இருந்தார்.

மேலும், பிரதமர் மோடி தனது ட்வீட்டில், பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் லீ சியன் லூங்-ற்கு வாழ்த்துக்கள் என்றும், சிறப்பான வளமான எதிர்காலம் அமைய சிங்கப்பூர் மக்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் பிரதமர் திரு. லீ அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் தமிழக ஊழியர்கள்..!

இந்நிலையில், அந்த ட்வீட்-க்கு பிரதமர் திரு. லீ பதில் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும், சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளும் நெருக்கமாக இணைந்து செயல்படுவதை தாம் எதிர்நோக்குவதாக பிரதமர் திரு. லீ குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் ICA கட்டிடம் உட்பட 21 புதிய இடங்கள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg