COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் ICA கட்டிடம் உட்பட 21 புதிய இடங்கள்..!

(Photo: Google Street View)

COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் மால்கள் உட்பட 21 புதிய இடங்களைச் சுகாதார அமைச்சகம் (MOH) சேர்த்துள்ளது.

புதிய இடங்களின் பட்டியலில் உணவு & பானக் கடைகள், ஈரச்சந்தை, வங்கி போன்றவை அடங்கும்.

இதையும் படிங்க : “ஒட்டுமொத்தமாக இந்த பொதுத் தேர்தல் முடிவுகள் திருப்தி அளிக்கின்றன” – பிரதமர் லீ..!

புதிய இடங்களின் பட்டியல்:
  • City Square மாலில் உள்ள OCBC வங்கி கிளை
  • வெஸ்ட் மாலில் உள்ள KFC உணவகம்
  • Bugis Junction
  • Tangs department store
  • குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையத்தின் கட்டடம் (ICA)
  • புக்கிட் பாஞ்சாங் ஈரச்சந்தை, உணவங்காடி நிலையம்
  • சைனாடவுன் Complex மற்றும் உணவங்காடி நிலையம்

மேலும் தொற்று உறுதியானவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தொடர்புகொள்ளப்பட்டதாக MOH கூறியுள்ளது.

(Table: MOH)

குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் MOH கூறியுள்ளது.

இதையும் படிங்க : GE2020: சிங்கப்பூர் பிரதமர் லீக்கு நரேந்திர மோடி வாழ்த்து.!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg