‘சிங்கப்பூர் பள்ளிப் பாடத்தில் இடம் பெற்ற தமிழ்நாட்டு கவிஞரின் கவிதை!’- குவியும் பாராட்டுகள்

Photo: Education Minister Chan Chun Sing Official Facebook Page

சிங்கப்பூரில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள், தங்களது வாழ்வாதாரம் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக சிங்கப்பூர் வந்து வேலை செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தை தனது குடும்பங்களுக்கு அனுப்பி மகிழ்ந்து வருகின்றனர். அதேபோல், பல்வேறு தமிழ் சங்கங்களும் சிங்கப்பூரில் உள்ளன. மேலும், தமிழறிஞர்கள், படைப்பாளர்களும் அதிகளவில் உள்ளனர். இவர்கள் இணைந்து சிங்கப்பூரில் அனைத்து தைப்பூசம், பொங்கல் உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளையும் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றன.

இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் கடிதம்!

இந்த நிலையில், சிங்கப்பூர் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரின் கவிதை சிங்கப்பூர் பள்ளிப் பாடத்தில் இடம் பெற்றது, தமிழ்நாட்டை மேலும் பெருமை அடைய செய்துள்ளது. அந்த சாதனை கவிஞர் யார்? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள மணிமுத்தாறு பகுதியைச் சேர்ந்தவர் தியாக இரமேஷ். கடந்த 1986- ஆம் ஆண்டு விருத்தாசலம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பை முடித்த பின், கடந்த 1990- ஆம் ஆண்டு சேலம் மாவட்டம், பெரிய சீரகப்பாடியில் உள்ள பழமை வாய்ந்த இராஜாஜி பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் பொறியியல் துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தார். அதைத் தொடர்ந்து, அவருக்கு சிங்கப்பூரில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. அதைப் பயன்படுத்திக் கொண்ட தியாக இரமேஷ், சிங்கப்பூரில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார். மேலும், அவர் சிங்கப்பூர் குடியுரிமையும் பெற்றுள்ளார்.

நிலவழி VTL: “ஜனவரி 21 முதல் தினசரி பேருந்து பயணங்கள் பாதியாக குறைக்கப்படும்”

இந்த நிலையில், தமிழ் மொழி மீது மிகுந்த காதல் கொண்ட தியாக இரமேஷ், பணி நேரம் தவிர்த்து கவிதை, இலக்கியம் என்று சிங்கை இலக்கிய வெளியில் பயணித்து வருகிறார். அந்த வகையில், சிங்கப்பூரில் கவிதைக்கென்று செயல்பட்டு வரும் கவிமாலை அமைப்பில் துணைச் செயலாளராகவும், தற்போது செயலவை உறுப்பினராகவும் செயலாற்றி வருகிறார். அத்துடன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம், சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றம் போன்ற பல்வேறு தமிழ் அமைப்புகளுடன் இணைந்து தொண்டாற்றி வருகிறார்.

இந்நிலையில், கவிஞர் தியாக இரமேஷ் எழுதிய கவிதை, சிங்கப்பூர் உயர்நிலைப்பள்ளி உயர்தமிழ் வகுப்பு 2A தமிழ் பாடநூலில் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ள கவிஞர் தியாக ரமேஷுக்கு விருத்தாசலம் மக்கள் மட்டுமின்றி, சிங்கப்பூரில் உள்ள தமிழ் சங்கங்கள், தமிழறிஞர்கள், கவிஞர்கள், படைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.