போலி விளம்பர மோசடி குறித்து பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

Police warn scam Pizza Hut
Police warn against phishing scam that uses fake Pizza Hut advertisements (PHOTO: Singapore Police Force)

துரித உணவு Pizza Hut போலி விளம்பரம் சம்பந்தப்பட்ட மோசடி குறித்து காவல்துறை நேற்று (நவம்பர் 29) பொதுமக்களை எச்சரித்துள்ளது.

இதுபோன்ற போலி விளம்பரங்கள் பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் சுற்றிவருவதாகவும், மலிவான விலையில் Pizza Hut என்று அந்த போலிகள் ஏமாற்றுவதாகவும் காவல்துறை செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு அன்பளிப்பு பைகள்!

போலி URL

இந்த விளம்பரத்தில் உள்ள URLஐக் கிளிக் செய்த பின்னர், அது ஒரு போலி Pizza Hut வலைத்தளத்திற்குள் நம்மை கொண்டு செல்லும்.

அங்கு பீஸ்ஸா ஆர்டர் செய்ய, வங்கி விவரங்கள் மற்றும் ஒரு முறை கடவுச்சொற்களை (OTP) செலுத்துமாறு ஏமாற்றப்படுவதாக கூறப்படுகிறது.

இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தங்கள் வங்கிக் கணக்குகளில், தாங்கள் மேற்கொள்ளாத பரிவர்த்தனைகளை அறிந்த பின்னர் மோசடி செய்யப்பட்டதை அவர்கள் உணர்ந்ததாக காவல்துறை தெரிவித்தனர்.

(PHOTO: Singapore Police Force)

காவல்துறை நினைவூட்டல்

பொதுமக்கள் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு காவல்துறை நினைவூட்டியது.

அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது ஆதாரங்களின் மூலம், நமக்கு கிடைக்கும் தகவலின் நம்பகத்தன்மையை எப்போதும் சரிபார்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஒருபோதும் தனிப்பட்ட அல்லது இணைய வங்கி விவரங்கள் மற்றும் OTPஐ யாருக்கும் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

மூன்று வாகனங்கள் மோதி விபத்து – 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…