சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தமிழர் திருநாள் கொண்டாட்டம்…!

Pongal 2020 Celebrations start from 10th January all the way till 9th February.

Pongal Festival in Singapore : உலகெங்கும் வாழும் தமிழர்களால் வெகு விமர்சையாக குதூகலமாக கொண்டாடப்படும் பொங்கல் விழா, தை மாதம் முதல் நாளில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

இந்த பொங்கல் விழா, உழவர் உழைப்புக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஜீரோ சகிப்புத்தன்மை அணுகுமுறை; 3 நாட்களில் 8 பேர் பிடிபட்டனர்..!

சிங்கப்பூரில், LISHA சார்பாக பொங்கல் ஒளியேற்றும் நிகழ்ச்சி வரும் ஜனவரி 10ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் லிட்டில் இந்தியா வண்ணமிகு ஒளி அலங்காரங்களால் கண்ணுக்கு விருந்தாய் அமையும் என்றும் கூறப்படுகிறது.

Photo : LISHA

பொங்கல் 2020 கொண்டாட்டங்கள் ஜனவரி 10 முதல் பிப்ரவரி 9 வரை நடைபெறும் என்று LISHA தெரிவித்துள்ளது.

கிராமியப் பாடல்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் அறுவடை பற்றி தெரிந்துகொள்ள Farm Tour போன்ற சுற்றுலாக்கள் அதில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : உலகின் பாதுகாப்பான விமான நிறுவனங்களின் பட்டியலில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்..!

Related posts