‘சிங்கப்பூரில் பொங்கல் பண்டிகை’: ‘Lisha’- வின் முக்கிய அறிவிப்பு!

Image : LISHA

சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை, ஆண்டுதோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். பாரம்பரிய வேஷ்டி, சட்டை அணிந்து, சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் மட்டுமின்றி, சிங்கப்பூர் மக்களும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.

முதலாளியிடம் இருந்து ‘ATM’ கார்டைத் திருடி பணம் எடுத்த பணிப்பெண்… சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்!

அந்த வகையில், வரும் ஜனவரி 14- ஆம் தேதி அன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கொரோனா, ஒமிக்ரான் நோய்த்தொற்றுக்கு மத்தியிலும் பண்டிகைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, ‘Lisha’ என்றழைக்கப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமை சங்கம், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைகளை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றது. அத்துடன், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுவது உண்டு. அந்த வகையில், பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் தொடர்பாக, ‘Lisha’-வின் நிர்வாகிகள் இன்று (05/01/2022) மதியம் செய்தியாளர்களைச் சந்தித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டனர்.

மேலாடை, முகக்கவசம் இன்றி இரண்டு ஆண்கள் மதுவுடன் விமானத்தில் ‘பார்ட்டி’- விசாரணையைத் தொடங்கியது ஸ்கூட்!

அதன்படி, பொங்கல் பண்டிகையையொட்டி, தெருக்களில் ஒளியூட்டு நிகழ்ச்சி (Pongal Street Light Up) வரும் ஜனவரி 8- ஆம் தேதி அன்று இரவு 07.00 PM மணி முதல் 09.00 PM மணி வரை Poli@Clive தெருவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், சிறப்பு அழைப்பாளராக ஆல்வின டான் (Minister Alvin Tan) உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர். கட்டுப்பாடுகள் காரணமாக, அழைப்பாளர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வர். லிட்டில் இந்தியா உள்ளிட்ட கடைவீதிகளில் ஒளியூட்டு வரும் பிப்ரவரி 6- ஆம் தேதி வரை இருக்கும்.

அதேபோல், பாரம்பரிய மாட்டு வண்டி உள்ளிட்டவை வரும் ஜனவரி 7- ஆம் தேதி முதல் ஜனவரி 16- ஆம் தேதி வரை மக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. இதற்காக, ஜனவரி 7- ஆம் தேதி அன்று காளை (Bull), பசுக்கள் (Cows), ஆடுகள் (Goats), கன்றுகள் (Calves), மாட்டு வண்டி (Bullock cart) உள்ளிட்டவை விக்னேஷ் பால் பண்ணை (Viknesh Dairy Farm) வருகின்றன. கால்நடை பண்ணை காலை 09.00 AM மணி முதல் இரவு 08.00 PM மணி வரை திறந்திருக்கும். ஒரே நேரத்தில் 5 நபர்கள் மட்டுமே விலங்குகளின் அருகில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்!

அதைத் தொடர்ந்து, ஜனவரி 8- ஆம் தேதி முதல் ஜனவரி 9- ஆம் தேதி வரை மண் பானைகளை அலங்கரிக்கும் போட்டிகள் நடைபெற உள்ளது. அதேபோல், ஜனவரி 10, 11, 12, 13 ஆகிய நான்கு தினங்களில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான பொங்கல் தின போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட மாணவர்களுக்கு மட்டுமே கலந்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.