பாரம்பரிய பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து பொங்கலைக் கொண்டாடிய சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

Photo: Singapore Minister Dr vivian balakrishnan Official Facebook Page

சிங்கப்பூரில் பொங்கல் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் பாரம்பரிய வேஷ்டி, சட்டை அணிந்தும், பெண்கள் புடவைகள் அணிந்தும் தங்கள் குடும்பத்துடன் பொங்கலைக் கொண்டாடி வருகின்றனர். அத்துடன், சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில், ஸ்ரீ சிவன் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.

“பொங்கலோ பொங்கல்!” என்று தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர் திரு. லீ!

லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமை நிலையம், இந்திய மரபுடைமை நிலையம் ஆகிய அமைப்புகள் நடத்திய பொங்கல் கொண்டாட்டங்களில் தமிழர்கள் மட்டுமின்றி சிங்கப்பூரர்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.

அந்த வகையில், ஜனவரி 15- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று புக்கிட் பாஞ்சாங்கில் பொங்கல் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் பாரம்பரிய பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டார்.

Photo: Singapore Minister Dr vivian balakrishnan Official Facebook Page

அதேபோல், ஹாலந்து- புக்கிட் தீமா குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எட்வர்ட் சியா (Edward Chia), புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா (Liang Eng Hwa) ஆகியோரும் பங்கேற்றனர். அத்துடன், விழாவை குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனர்.

அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு எதிராக வலுக்கும் விசாரணை – FIFA உறுதி

அதைத் தொடர்ந்து, மண் பானையில் பச்சரிசி, வெள்ளம், முந்திரி, திராட்சை, பால், நெய் ஆகியவையைப் போட்டு, பொங்கலிட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்டது. பொங்கல் கொண்டாட்டத்தில் பொய்க்கால் குதிரை ஆட்டம், கரகாட்டம், நாட்டுப்புற பாடல்கள் ஆகியவை இடம் பெற்றது. இதில், தமிழகத்தில் பிரபலமான நாட்டுப்புற கலைஞர்களான செந்தில், ராஜலட்சுமி தம்பதி பங்கேற்று பாடியது விழாவை மேலும் மெருக்கூட்டியது.

பொங்கல் கொண்டாட்டத்தில் சுமார் 200- க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டு, நிகழ்ச்சிகளைக் கண்டுக் களித்தனர்.