‘பொங்கல் ஒளியூட்டு விழா 2024’- லிஷா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

'பொங்கல் ஒளியூட்டு விழா 2024'- லிஷா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
Photo: Indian Heritage Centre

 

 

பொங்கல் திருநாள் நெருங்கியுள்ள நிலையில், சிங்கப்பூரில் அதற்கான கொண்டாட்டங்களுக்கு சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் தயாராகி வருகின்றனர். அந்த வகையில், லிட்டில் இந்திய கடைக்காரர்கள் மற்றும் இந்திய மரபுடைமை நிலையம் என்றழைக்கப்படும் ‘லிஷா’ (Lisha) அமைப்பின் நிர்வாகிகள் நேற்று (ஜன.03) செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

“ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் இருமுடி திருவிழா!”

அப்போது, வரும் ஜனவரி 06- ஆம் தேதி அன்று ‘பொங்கல் ஒளியூட்டு விழா- 2024’ (Pongal Light Up Ceremony- 2024) தொடங்கவுள்ளதாக லிஷா நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். அதன்படி, வரும் ஜனவரி 06- ஆம் தேதி அன்று இரவு 07.00 மணிக்கு லிட்டில் இந்தியாவில் உள்ள கிளைவ் தெருவில் (Poli@Clive Street) பொங்கல் ஒளியூட்டு விழா- 2024 நடைபெறவுள்ளது. இந்த விழாவில், சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்; அனுமதி இலவசம்.

'பொங்கல் ஒளியூட்டு விழா 2024'- லிஷா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
Photo: Lisha

இந்த விழாவில், சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ சிறப்பு விருந்தனராகக் கலந்து கொள்ளவிருக்கிறார்.

ஜனவரி 06- ஆம் தேதி அன்று இரவு முதல் லிட்டில் இந்தியாவில் உள்ள பல்வேறு முக்கிய சாலைகள் வண்ணமின் விளக்குகளில் ஜொலிக்கும்; அதேபோல், பொங்கல் திருநாளை வரவேற்கும் வகையில் வாசகங்கள் அடங்கிய அலங்கார தோரணங்களும் ஒளியூட்டில் இடம் பெறவுள்ளது.

வெளிநாட்டில் ஓட்டுநராகப் பணிபுரியும் இந்தியருக்கு லாட்டரியில் ரூபாய் 44 கோடி பரிசு!

பொங்கல் திருநாளை இன்றைய தலைமுறையினருக்கு விளக்கும் வகையில் நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://pongal.sg/ என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.