வெளிநாட்டில் ஓட்டுநராகப் பணிபுரியும் இந்தியருக்கு லாட்டரியில் ரூபாய் 44 கோடி பரிசு!

File Photo

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் இந்தியருக்கு லாட்டரியில் 44 கோடி ரூபாய் பரிசுக் கிடைத்துள்ளது.

வேலையிடத்தில் மின்னல் தாக்கியதில் 3 கட்டுமான ஊழியர்கள் பாதிப்பு

இந்தியரான முனாவர் பைரோஸ் (Munavar Fairoos) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் அய்ன் (Al Ain) என்ற பகுதியில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த நிலையில், கிடைத்த சம்பளம் போதாமல், பணம் ஈட்ட வேறு வழிகளைத் தேடியுள்ளார். அதன் மூலம் பிக் டிக்கெட் என்ற லாட்டரி திட்டம் மூலம் நண்பர்களுடன் இணைந்து லாட்டரி சீட்டுகளை வாங்க ஆரம்பித்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் தவறாமல் லாட்டரி சீட்டு வாங்கிய நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 31- ஆம் தேதி அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 44 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

“ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் இருமுடி திருவிழா!”

எனக்கு பரிசு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை என பைரோஸ் குறிப்பிட்டுள்ளார். நண்பர்களின் பங்களிப்புடன் லாட்டரி சீட்டு வாங்கிய அவர், தனக்கு கிடைக்கவிருக்கும் பணத்தை 30 பேருடன் பகிரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேபோல், அபுதாபியைச் சேர்ந்த சுதீஸ்குமார் குமரேஷன் என்பவருக்கு கடந்த டிசம்பர் மாதம் லாட்டரியில் 2 கோடி ரூபாய் பரிசு கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.