நிதி நெருக்கடியை சமாளிக்க சொந்த நகைகளை விற்கும் இந்தியர்கள்!

Photo: Tamil Goods Return

உலகிலேயே மக்கள் தொகையில் 2வது இடத்திலும், பொருளாதாரத்தில் 3வது இடத்திலும் இருக்கும் இந்தியா, கோவிட்-19 தொற்றுப்பரவலின் காரணமாக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ளது.

இந்திய மக்களும் கோவிட்-19 தாெற்றினால் ஏற்பட்ட தொழில் முடக்கம், Lockdown மற்றும் வேலையிழப்பு காரணங்களால் பல்வேறு பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

நாள் ஒன்றுக்கு சுமார் 20 மணி நேரம் வேலை வாங்கிய நிறுவனங்கள் – MOM அதிரடி நடவடிக்கை

இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த மக்களில் பலர் வீட்டு வாடகை, தங்கள் பிள்ளைகளின் பள்ளிக்கூட கட்டணங்கள், குடும்பத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கு என பல பணத்தேவைகளுக்கு திண்டாடி வருகின்றனர்.

இவ்வாறு கோவிட்-19 தொற்றுப் பரவல் ஏற்பட்டதற்கு பின் சுமார் 230 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையால் அவதிப்படுகின்றனர் என்று ஆஸிம் பிரேம்ஜி பல்கலைக் கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள மின்சாரக் கட்டணம், எரிப்பொருட்களின் விலையுயர்வு மற்றும் குடும்பத்திற்கு தேவையான இதரப் பொருட்களின் திடீர் விலையேற்றத்தின் காரணமாக மக்கள் மேலும் கஷ்டப்படுகின்றனர்.

இப்படி பல்வேறு நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கியுள்ள இந்திய மக்கள், தங்களுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, அவர்கள் சேமித்து வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் அவர்களுக்கு சீதனமாக வந்த தங்க நகைகளை விற்க ஆரம்பித்துள்ளனர்.

சிறு தாெழில் செய்யும் வியாபாரிகள், வேலை செய்பவர்கள் என பலர் தங்கள் பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, தங்களுடைய நகைகளை அதிகமானோர் விற்பதாக மும்பையைச் சேர்ந்த ஜுவல்லரி நிறுவனர் குமார் ஜெயின் (வயது 63) தெரிவித்துள்ளார்.

இதுவரை இதுபோன்று மக்கள் அதிகமாக தங்கள் நகையை விற்றதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். கிட்டதட்ட சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் இவரது குடும்பம் மும்பையில் நகைக்கடை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் மேலும் 3,190 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!