சிங்கப்பூரில் புதிதாக COVID-19 தொற்று பாதித்தவர்கள் சென்று வந்த மேலும் 3 இடங்கள் வெளியீடு..!

Waterway Point, POSB outlet at Kaki Bukit, Harbourfront Centre visited by COVID-19 cases
Waterway Point, POSB outlet at Kaki Bukit, Harbourfront Centre visited by COVID-19 cases (SCREENSHOT: Waterway Point/Google Maps)

சிங்கப்பூரில் COVID-19 தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த இடங்களில் மேலும் 3 இடங்களின் பெயர்களை சுகாதார அமைச்சகம் (MOH) வெளியிட்டுள்ளது.

  • காக்கி புக்கிட் பொழுதுபோக்கு மையத்தில் உள்ள POSB கிளை
  • ஹார்பர்ஃப்ரண்ட் சென்டர் (HarbourFront Centre)
  • வாட்டர்வே பாயிண்ட் (Waterway Point) ஆகியவை ஆகும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் டிஜிட்டல் வளர்ச்சி மையத்தை தொடங்க உள்ள டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS)..!

மேலும் முஸ்தபா சென்டர் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது, தொற்று பாதித்தவர்கள் வருகை தந்த நேரம் ஜூன் 9 அன்று இரவு 7.50 மணி முதல் இரவு 8.35 மணி வரை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நேரத்தில், மேலே குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 463 புதிய COVID-19 சம்பவங்கள் பதிவு – சமூக அளவில் 18 பேர் பாதிப்பு..!