மின்சாரக் கட்டணம் இவ்வாண்டின் இறுதிக் காலாண்டில் உயருகிறது!

Photo: Housing and Development Board

சிங்கப்பூரில் உள்ள குடியிருப்புகளுக்கான மின்சார கட்டணம் தொடர்பாக, எஸ்பி குழுமம் நேற்று (30/09/2021) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “அக்டோபர் 1- ஆம் தேதி முதல் டிசம்பர் 31- ஆம் தேதி வரை மின்சாரக் கட்டணம் உயரவிருக்கிறது. நடப்பு நிதியாண்டில் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடும் போது, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நான்காம் காலாண்டில் (இறுதி) மின்சாரக் கட்டணம் சராசரியாக 3.2% உயருகிறது.

மனைவியைக் கடத்திக் கொல்ல முயன்ற கணவருக்கு சிறை!

மின்சாரம் உற்பத்திச் செய்வதற்கான எரிபொருள் விலை அதிகரிப்பே மின்சார விலை உயர்வதற்கான காரணம். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டுக்கு பிறகு, மின்சாரக் கட்டணம் இந்த அளவு உயரவிருப்பது இதுவே முதல்முறை ஆகும். வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு அறைக் கொண்ட வீடுகளில் வசிப்போருக்கான சராசரி மின்சாரக் கட்டணம் மாதத்திற்கு 2.49 சிங்கப்பூர் டாலர் அதிகரிக்கும்” எனத் தெரிவித்துள்ளது.

விரைவு பரிசோதனை நிலையங்களில் இன்று முதல் பரிசோதனைக்கு முன்பதிவு செய்துக் கொள்ளலாம்!

எரிசக்திச் சந்தை ஆணைய வழிகாட்டி விதிகளுக்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் எஸ்பி குழுமம், மின்சாரக் கட்டணத்தை மறுஆய்வு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.