பெண் என்று போலி கணக்கு தொடங்கி பல பெண்களிடம் அந்தரங்க போட்டோ, வீடியோக்களை குவித்த புலம்பெயர்ந்த ஊழியர் – 40 மாத சிறை

meta-facebook-layoff

சிங்கப்பூரில் உள்ள ஆடவர் ஒருவர், தனியார் மருத்துவமனை பெண் மகப்பேறு மருத்துவர் போல் நடித்து பெண்களை ஏமாற்றியுள்ளார்.

தாம் பெண் என்று சொல்லி பல பெண்களிடம் அந்தரங்கமான புகைப்படங்களை அனுப்ப சொல்லியுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

பிரபலமான அரிசி வகைகளுக்கு அதிரடி தள்ளுபடி – NTUC FairPrice

ஓய் சுன் வெய் என்ற அந்த ஆடவர், 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கு இடையில் 919 வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை குறைந்தது 35 பெண்களிடமிருந்து பெற்றார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவருக்கு நேற்று அக்., 26 ஆம் தேதி அன்று 40 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மலேசியரான அவர் “டாக்டர் ஜானிஸ் லீ” என்ற பெயரில் 2016ஆம் ஆண்டு பேஸ்புக் கணக்கை உருவாக்கி இந்த சூழ்ச்சி திட்டங்களை செயல்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வெளிநாட்டவருக்கு கடும் எச்சரிக்கை