தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான ‘Police Pal’ திட்டத்தைத் தொடங்கியது காவல்துறை!

Photo: Singapore Police Force Official Facebook Page

சிங்கப்பூரில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான ‘Police Pal’ திட்டத்தை நேற்று முன்தினம் (23/12/2021) தொடங்கியது சிங்கப்பூர் காவல்துறை. இத்திட்டம் மூலம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுகள் மூலம் காவல்துறையினரின் பணிகள், குற்றச்செயல்களைத் தடுப்பது உள்ளிட்டவைக் குறித்து விளக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“குடும்பங்களும், நண்பர்களும் கூடும்போது, தொடர்ந்து பாதுகாப்பாக இருங்கள்”- பிரதமர் லீ சியன் லூங் அறிவுறுத்தல்!

சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், தொடக்கப்பள்ளி மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான முதன்மைத் திட்டமான ‘Police Pal’ டிசம்பர் 23- ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது. நாங்கள் (காவல்துறை) என்ன செய்கிறோம் மற்றும் சமூகத்துடன் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதைப் பற்றிய சிறந்த புரிதலை மாணவர்களுக்கு வழங்குவதை ‘Police Pal’ நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், குற்றச்செயல்களில் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதையும் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force), கல்வி அமைச்சகத்துடன் (MOE) நெருக்கமாகப் பணிபுரிந்து, திட்டத்தின் உள்ளடக்கம் MOE- யின் குணாதிசயங்கள் மற்றும் குடியுரிமைக் கல்விப் பாடத்திட்டத்திற்கு (Citizenship Education Syllabus) இணங்குவதையும், பொருட்கள் (Materials) மாணவர்களைக் கவர்ந்திழுப்பதாகவும், வளப்படுத்துவதாகவும் உள்ளன.

“வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் 7 நாள் வீட்டு தனிமை கட்டாயம்”- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

பல்வேறு நிலைகளில் ‘Police Pal’ முழுவதும் குற்றத் தடுப்பு பற்றி மேலும் அறிந்துகொள்வதன் மூலம் நடவடிக்கைகள் முழுவதும் மாணவர்களுடன் இருப்பதன் மூலம் ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார்த்தைகளைத் தேடி கண்டுபிடித்தல், கதையைப் படித்து வினாக்களுக்கு பதிலளித்தல், வரைதல், குறுக்கெழுத்து, சொல் தேடல் போன்ற மாணவர்களுக்கு பிடித்த விளையாட்டுகள் மூலம், இத்திட்டம் எடுத்துரைக்கப்பட உள்ளது. இத்திட்டம் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.