சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர்

சிங்கப்பூரில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மூன்று தனித்தனி சந்தர்ப்பங்களில் அவ்வாறு நடந்துகொண்டதாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சர்வதேச விமானங்களில் முகக்கவசம் கட்டாயமா? – இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விதி என்ன?

தற்போது 36 வயதாகும் அந்த ஆசிரியர், சிறுமிக்கு அப்போது 10 – 13 வயது வரை இருக்கும் போது இந்தக் குற்றங்களைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

அந்த நபர் மீது கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி அன்று மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. அதோடு அவருக்கு S15,000 க்கு பிணையும் வழங்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸுக்கு அளித்த அறிக்கையில்; அந்த ஆசிரியர் 2020 ஆம் ஆண்டு ஜூன் முதல் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், இனி எந்தப் பள்ளியிலும் அவரால் பணியாற்ற முடியாது என்றும் கல்வி அமைச்சகம் (MOE) கூறியது.

சிங்கப்பூரில் இன்று ஆக.29 முதல் அதிகமான இடங்களில் முகக்கவசம் தேவையில்லை: எங்கெங்கு? – முழுவிவரம்