சிங்கப்பூர் பிரதமரை வீடியோ அழைப்பில் தொடர்புக் கொண்டு பேசிய கம்போடிய பிரதமர்!

This solidarity and perseverance in times of adversity defines our Singapore spirit - PM Lee
PHOTO: Ministry of Communications and Information

ஜனவரி 14- ஆம் தேதி அன்று கம்போடியா நாட்டின் பிரதமர் ஹுன் சென் (Cambodian Prime Minister Hun Sen) வீடியோ அழைப்பு மூலம் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கைத் (Singapore Prime Minister Lee Hsien Loong) தொடர்புக் கொண்டு பேசினார்.

ஓட்டுநர் கண்ணாடி வழி முன் அங்கத்தை பார்த்ததாக வீடியோ வெளியிட்ட பெண் பயணி – பெண்ணை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

இது குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் (Ministry Of Foreign Affairs In Singapore), “கம்போடிய பிரதமர் ஹுன் சென், கம்போடியாவின் ஆசியான் தலைமைத்துவ முன்னுரிமைகள் (ASEAN Chairmanship priorities) மற்றும் 2022- ஆம் ஆண்டிற்கான நிகழ்ச்சி நிரல் குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கிடம் விளக்கினார். கம்போடியாவின் ஆசியான் தலைவர் பதவிக்கு சிங்கப்பூரின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர் லீ சியன் லூங், தனது சமீபத்திய மியான்மர் விஜயம் குறித்த விளக்கத்திற்கு பிரதமர் ஹுன் சென் நன்றி தெரிவித்தார்.

கடந்த 2021- ஆம் ஆண்டு ஏப்ரல் 24- ஆம் தேதி அன்று ஜகார்த்தாவில் உள்ள ஆசியான் செயலகத்தில் ஆசியான் தலைவர்களுக்கும் மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லேயிங்கிற்கும் (ASEAN Leaders and Senior General Min Aung Hlaing) இடையே நடந்த கூட்டத்தில், ஆசியானின் ஐந்து முக்கிய ஒருமித்த கருத்தை செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று பிரதமர் லீ குறிப்பிட்டார். ஐந்து அம்ச கருத்தொற்றுமையை நடைமுறைப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் வரை, மியான்மரில் இருந்து அரசியல் சார்பற்ற பிரதிநிதியை ஆசியான் கூட்டங்களுக்கு அழைப்பது என்ற 38- வது மற்றும் 39- வது ஆசியான் உச்சிமாநாட்டில் (38th and 39th ASEAN Summits) எட்டப்பட்ட முடிவை ஆசியான் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் லீ தனது கருத்தை தெரிவித்தார்.

புதுப்பொலிவுடன் ஜொலிக்கும் மகாத்மா காந்தி நினைவு மண்டபம்!

ஆசியான் தலைவர்களின் முடிவை மறுபரிசீலனை செய்வதற்கான எந்தவொரு விவாதமும், புதிய உண்மைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். ‘Tatmadaw’ மற்றும் ‘National League for Democracy’ (NLD) உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் ஆசியான் தலைவர் ஈடுபடுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் லீ வலியுறுத்தினார். Tatmadaw இன ஆயுத அமைப்புகளுடன் (Ethnic Armed Organisations- ‘EAOs’) போர்நிறுத்தத்தை மட்டுமே முன்மொழிந்தார். ஆனால், ஐந்து அம்ச கருத்தொற்றுமையில் வன்முறையை நிறுத்துவதற்கான அழைப்பு, Tatmadaw-வின் அரசியல் எதிரிகள் மற்றும் குடிமக்களுக்கு எதிரான வன்முறையைக் குறிக்கிறது. பிரதமர் ஹுன் சென் விஜயம் செய்த சில நாட்களுக்குப் பிறகு, அதன் அரசியல் எதிரிகளுக்கு எதிராக Tatmadaw- வால் மேலும் தாக்குதல்கள் நடந்ததாகவும், அரச ஆலோசகர் ஆங் சான் சூகிக்கு கூடுதல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும் பிரதமர் லீ குறிப்பிட்டார்.

மியான்மரில் போர் நிறுத்தத்தை ஒருங்கிணைத்து, மியான்மர் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை எப்படி வழங்குவது என்பது குறித்து பிரதமர் ஹுன் சென் சில திட்டங்களை முன்வைத்தார். அனைத்து தரப்பினரையும் அணுக முடியாததால், போர் நிறுத்தத்தை ஒருங்கிணைப்பதில் ஆசியான் அல்லது மியான்மரில் ஆசியான் தலைவரின் சிறப்புத் தூதுவர் என்ன பங்கு வகிக்க முடியும் என்று தனக்குத் தெரியவில்லை என்று பிரதமர் லீ கூறினார். எவ்வாறாயினும், வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமானால், சிங்கப்பூர் அத்தகைய ஒரு முறைக்கு கொள்கை ரீதியாக ஆட்சேபனைகள் எதுவும் கொண்டிருக்கவில்லை.

ஜனவரி 17- ஆம் தேதி அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!

பேரிடர் மேலாண்மைக்கான மனிதாபிமான உதவிக்கான ஆசியான் ஒருங்கிணைப்பு மையம் (ASEAN Coordinating Centre for Humanitarian Assistance on disaster management- ‘AHA Centre’) மற்றும் Tatmadaw- இன் ஒத்துழைப்புடன் மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் முன்னேற்றம் தேவை என்று பிரதமர் லீ கூறினார். ஆசியான் தலைவர் எழுப்பிய இந்த முன்மொழிவுகள் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளிடையே மேலும் விவாதிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் லீ தெரிவித்தார்.

பிரதமர் லீ, கம்போடியா தனது மற்றும் பிற ஆசியான் தலைவர்களின் கருத்துக்களைப் பரிசீலிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஆசியானின் ஐந்து ஒருமித்த கருத்து மற்றும் தொடர்புடைய ஆசியான் முடிவுகளை முழுமையாக செயல்படுத்துவதில் கம்போடியா மற்றும் பிற ஆசியான் உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கான சிங்கப்பூரின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்”. இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.