அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு… ‘CMTG’ அலுவலகத்தில் திடீரென ஆய்வு செய்த பிரதமர்!

Photo: Prime Minister Official Facebook Page

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதேபோல், மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் குவிந்து வருவதால், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளன.

இந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சகம் சிங்கப்பூர் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. அதேசமயம், கொரோனா தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு, மருத்துவர்கள் மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிக் குணமடையும் திட்டத்தை அறிமுகப்படுத்தி அமல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கு யார் யார் தகுதிப் பெறுவர் என்பது குறித்த விவரங்களையும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரை சேர்ந்த மல்யுத்த வீரர் WWE அறிமுக போட்டியில் அபார வெற்றி!

இந்தச் சூழலில், சுகாதார அமைச்சகத்தின் கொரோனா மேலாண்மைப் பணிக் குழு அலுவலகத்திற்குச் (Case Management Task Group- ‘CMTG’) பிரதமர் லீ சியன் லூங் நேற்று முன்தினம் (21/09/2021) நேரில் சென்று திடீரென ஆய்வு செய்தார். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்து குணமடையும் முறை குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் கேட்டறிந்தார்.

இது குறித்து பிரதமர் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “கொரோனா நோயாளிகளை அடையாளம் காண்பதிலிருந்து அவர்கள் குணமாகும் வரை, அனைத்தையும் நிர்வகிப்பது அந்தக் குழுதான். நோயாளிகளுக்குப் பொருத்தமான பராமரிப்பு வசதிகளை நியமிப்பது, போக்குவரத்து ஏற்பாடு செய்வது, அவர்கள் என்ன செய்ய வேண்டும் எனத் தகவல் அளிப்பது ஆகியவை அதில் அடங்கும். மருத்துவமனை படுக்கைகளுக்கான தேவையைக் குறைப்பதற்காக, முழுமையாகத் தடுப்பூசிப் போட்டவர்கள் வீட்டிலிருந்தே குணமாகுமாறு ஊக்குவிக்கப்படுகிறது. அதன் மூலம், கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் உரிய சிகிச்சையைப் பெறலாம்.

சிங்கப்பூரில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட மூதாட்டி உட்பட மூன்று பேர் மரணம்!

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு இது ஒரு மன அழுத்தமான நேரம் என்று எனக்குத் தெரியும். கொரோனா மேலாண்மைப் பணிக் குழு வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் செயல்படுகின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகின்றன, மேலும் எங்கள் செயல்பாடுகளை அதிகரிக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். மேலும் அனைத்து நோயாளிகளும் நன்கு பராமரிக்கப்படுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துக்கிறோம்.

கொரோனா மேலாண்மை பணிக் குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் அயராத முயற்சிகளுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, தடுப்பூசிப் போட்டுக் கொண்டு, முகக்கவசங்களை சரியாக அணிந்தால், தற்போதைய கொரோனா அலைகளை மெதுவடைய செய்ய முடியும்” என்று குறிப்பிட்டார்.