சிங்கப்பூர் செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ‘PSLV- C56’!

சிங்கப்பூர் செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது 'PSLV- C56'!
Photo: ISRO

 

 

ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து ‘PSLV- C56’ ராக்கெட் சிங்கப்பூரின் DS-SAR மற்றும் ஆறு சிறிய செயற்கைக்கோள்களுடன் இன்று (ஜூலை 30) காலை 06.30 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

‘மதுரை, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- பயணக் கட்டணம் எவ்வளவுத் தெரியுமா?

‘PSLV- C56’ ராக்கெட் மூலம் ஏவப்பட்ட சிங்கப்பூரின் முக்கிய செயற்கைக்கோளான ‘DS-SAR’ மற்றும் ARCADE, VELOX-AM, SCOOB-II, ORB-12 STRIDER, Galassia-2, NuLIoN ஆகிய சிறிய செயற்கைக்கோள்களை சுற்றுவட்டப் பாதையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நிலைநிறுத்தினர்.

இதில், DS-SAR செயற்கைக்கோள் சுமார் 352 கிலோ எடைக் கொண்டது. அதேபோல், ‘DS-SAR’ என்ற பிரதான செயற்கைக்கோள் சிங்கப்பூர் அரசு மற்றும் எஸ்டி இன்ஜினியரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது.

பாலியியல் தொழில்… 200க்கும் மேற்பட்டோரை மடக்கி பிடித்த போலீஸ்

‘PSLV- C56’ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஏழு செயற்கைக்கோள்களும் வானிலை தகவலுக்காக அனுப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.