சிங்கப்பூரின் சில பகுதிகளில் தீடீர் வெள்ள அபாய எச்சரிக்கை.!

Pub flash flood warning
Pic: SGRV/FB

சிங்கப்பூரில் ஜூலை மாதம் முதல் பாதியில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்றும், இந்த மாதம் முழுவதும் வடமேற்குப் பருவமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை ஆய்வுத்துறை முன்னதாக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், சிங்கப்பூரின் சில பகுதிகளில் பெய்துவரும் கன மழை காரணமாக சில பகுதிகளிலுள்ள வடிநீர் வாய்க்கால்களிலும், கால்வாய்களிலும் நீர்மட்டம் 90 விழுக்காடு உயர்ந்துள்ளது.

கொரோனா விதிமீறல்- இந்திய நாட்டைச் சேர்ந்தவருக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை!

இதனால், சில இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுப் பயனீட்டுக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த ஒரு மணி நேரத்திற்கு கீழ்க்கண்ட இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கும்படி, இன்று (ஜூலை 13) காலை 7 மணியளவில், பொதுப் பயனீட்டுக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

தவிர்க்கவேண்டிய இடங்கள்:

• Woodlands Road / KJE (Issued 07:05 hours)
• Sungei Tengah Road / Sungei Tengah Agrotechnology Park (Issued 07:11 hours)
• Seletar Road / Neram Road (Issued 07:19 hours)
• Sungei Tongkang (Yio Chu Kang Road) (Issued 07:24 hours)
• Sungei Puak Besar (Cactus Road) (Issued 07:26 hours)
• Upper Paya Lebar Road (Issued 07:30 hours)
• Sungei Tongkang (Lorong Buangkok) (Issued 07:30 hours)
• Sime Darby Centre (Issued 07:40 hours)

உள்ளூர் ஊழியர்களை பாதுகாக்கும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஆதரவு; தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்.!