சிங்கப்பூரில் 300,000க்கும் மேற்பட்ட பொது போக்குவரத்து வவுச்சர்கள்!

(Photo: Koh Mui Fong/TODAY)

சுமார் S$15 மில்லியனுக்கும் கூடுதல் மதிப்புள்ள 300,000க்கும் மேற்பட்ட பொது போக்குவரத்து வவுச்சர்கள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதனை போக்குவரத்து அமைச்சகம் (MOT) மற்றும் மக்கள் மன்றம் (PA) இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 18) தெரிவித்துள்ளது.

காட்டு சரிவில் கீழே விழுந்த சைக்கிள் ஓட்டுநர் – குடிமை பாதுகாப்பு படை உதவி..!

இந்த ஒவ்வொரு பொது போக்குவரத்து வவுச்சரும் S$50 மதிப்புடையது, இதனை கட்டண அட்டைகளில் பணம் நிரப்பவோ அல்லது மாதாந்திர சலுகை அட்டையை வாங்கவோ பயன்படுத்தப்படலாம்.

கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தொடங்கப்பட்டதிலிருந்து நீட்டிக்கப்பட்ட 2019 பொதுப் போக்குவரத்து வவுச்சர் நடவடிக்கையின் கீழ் இந்த வவுச்சர்கள் வழங்கப்பட்டன என்று MOT மற்றும் PA செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளன.

சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகத்தின் (MSF) ComCare குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால உதவித் திட்டங்களின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நேரடியாக விநியோகிக்கப்பட்ட முதல் தொகுதி வவுச்சர்களின் முதல் தவணையும் இதில் அடங்கும்.

தகுதியான குடும்பங்கள் அடுத்த ஜனவரி 31 வரை, பொது போக்குவரத்து வவுச்சர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் வழங்கப்பட்ட அனைத்து வவுச்சர்களையும் அடுத்த ஆண்டு ஜூன் 30க்குள் பயன்படுத்த வேண்டும்.

ஒரு நபருக்கான, அவர்களின் மாதாந்திர வீட்டு வருமானம் S$1,200 ஐத் தாண்டவில்லை என்றால் அந்தக் குடும்பங்கள் இதற்கு தகுதி பெறும்.

பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இந்திய நாட்டவர்க்கு சிறை, பிரம்படிகள்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…