சிங்கப்பூர் தேசிய தினம்: தீவு முழுவதும் பொது எச்சரிக்கை ஒலி..!

(Photo: Reuters)

சிங்கப்பூரில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 9) தேசிய தினத்தன்று, தீவு முழுவதும் பொது எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.

அதாவது அன்று ‘All Clear’ எனும் எச்சரிக்கை ஒலியானது, காலை 10.30 மணிக்கும் மற்றும் இரவு 8.20 மணிக்கும் எழுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒளியானது சுமார் 20 விநாடிகள் நீடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் அனைத்து தங்கும் விடுதியும் COVID-19 தொற்று இடங்களுக்கான பட்டியலிலிருந்து இன்று நீக்கப்படக்கூடும்..!

முதல் ஒலி:

சிங்கப்பூரின் வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் தேசிய கொடிகள் ஏற்றப்படும் வேளையில், தேசிய தினத்தன்று காலை 10.30 மணிக்கு எழுப்பப்படும் முதல் ஒலியானது, அனைத்து சிங்கப்பூரர்களையும் தேசிய கீதம் பாடும்படி உணர்த்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது..

இரண்டாம் ஒலி:

அதே போல அன்று இரவு 8.20 மணிக்கு எழுப்பப்படும் இரண்டாவது ஒலி, சிங்கப்பூரர்கள் அனைவரும் தேசிய உறுதிமொழி ஏற்கும்படி நினைவூட்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று SCDF அறிவுறுத்தியுள்ளது. பொது எச்சரிக்கை ஒலி பற்றிய கூடுதல் தகவல்களை இணையத்தில் காணலாம்.

இந்த ஆண்டு, தேசிய தின அணிவகுப்பு காலையிலும் மாலையிலும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் தேசிய தினக் கொண்டாட்டங்களின் முக்கிய பகுதியாக வாணவேடிக்கைகள் நடைபெறும், இந்த முறை சிங்கப்பூரில் 10 இடங்களில் கண்கவர் வாணவேடிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதன் அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் வீட்டிலேயே தங்கி கண்கவர் காட்சியை ரசிக்குமாறு அறிவுறுத்துப்படுகின்றனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் உதவி தேவைப்படும் வெளிநாட்டு ஊழியருக்கான சில உதவி எண்கள்

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg