சிங்கப்பூரில் அனைத்து தங்கும் விடுதியும் COVID-19 தொற்று இடங்களுக்கான பட்டியலிலிருந்து இன்று நீக்கப்படக்கூடும்..!

(Photo: Roslan Rahman/AFP via Getty Images)

COVID-19 பரவல் அபாயம் கொண்ட மேலும் 14 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள், பரவல் அபாயம் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

தற்போது குணமடைந்தவர்களும் மற்றும் சமீபத்தில் COVID-19 தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டவர்களும் மட்டுமே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள் இந்த மாத இறுதிக்குள் வேலைக்குத் திரும்ப முடியும் – அமைச்சர் லாரன்ஸ் வோங்..!

அவற்றில் 1 Woodlands Terraceயில் உள்ள Lingjack Dormitory, Beyond Tuas South Boulevard, 5 Kaki Bukit Industrial Terrace, 52 Kaki Bukit Industrial Terrace, 13 Kaki Bukit Road 4, 10 Kranji Link, 119 Neythal Road மற்றும் 46 Tech Park Crescent ஆகியவை அடங்கும்.

தங்கும் விடுதியில் உள்ள குடியிருப்பாளர்களின் இறுதி குழுவை தீவிரமாக சோதித்து வருவதாகவும், இன்று ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குள் அனைத்து தங்கும் விடுதியும் COVID-19 பட்டியலிலிருந்து நீக்கப்படக்கூடும் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளாக செயல்படும், தங்கும் விடுதிகளில் ஒரு சில தனித்தனி பிளாக்குகளை தவிர என்றும் அமைச்சகம் மேலும் கூறியது.

மீதமுள்ள தங்கும் விடுதிகளில் COVID-19 இன் பரவலைப் பொறுத்து, அதன் குடியிருப்பாளர்கள் சோதிக்கப்படுவதால், வரும் நாள்களில் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் தினசரி எண்ணிக்கை ஏற்ற, இறக்கமாக இருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில் ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டினர் – MOM..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg