ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு.. 7மீ நீளம், 140 கிலோ எடை – நகர முடியாமல் சிக்கியது

python kedah eat goat - ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு.. 7மீ நீளம், 140 கிலோ எடை - நகர முடியாமல் சிக்கியது
Apm Kubang Pasu and The Star

மலேசியாவின் கெடா பகுதியில் சுமார் ஏழு மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சமீபத்தில் பிடிபட்டது.

ஆட்டுக் கொட்டகையில் இருந்த ஒரு பெரிய ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு அங்கேயே அசையாமல் காணப்பட்டதாக தி ஸ்டார் கூறியுள்ளது.

பசியாக இருப்பதாகக் கூறி யாசகம் வாங்கிய பெண்.. லாட்டரி டிக்கெட் வாங்க வரிசையில் நின்றதால் அதிர்ச்சி அடைந்த ஆடவர்

இதனை அடுத்து, குபாங் பாசு குடிமைத் தற்காப்புப் படையினர் அந்த மலைப்பாம்பைப் பிடித்ததாக கூறியுள்ளனர்.

பொதுவாக பாம்புகள் தாம் உண்ட இரையை ஜீரணிக்க சில நாட்கள் அல்லது வாரங்கள் எடுத்து கொள்ளலாம்.

பெரிய உணவுகளை உட்கொண்டால் அவைகளால் விரைவாக ஊர்ந்து செல்ல முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த அக்., 19ம் தேதி காலை 8.23 ​​மணிக்கு பாம்பு குறித்த தகவல் கிடைத்ததாக குடிமைத் தற்காப்புப் படை முகநூலில் பகிர்ந்துள்ளது.

சுமார் 140 கிலோ எடையுடன் இருந்த அந்த மலைப்பாம்பை பிடிக்க 25 நிமிடம் ஆனது எனவும் அது கூறியுள்ளது.

பின்னர் அது மாநில வனவிலங்கு துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

பயணிகளின் லக்கேஜ்களை இறக்காமல் வேறு பயணிகளுடன் மீண்டும் இந்தியா பறந்த இண்டிகோ விமானம்