விரைவு சோதனை நிலையங்களில் சுய ART சோதனைகளுக்கு கட்டணம் எவ்வளவு?

(PHOTO: Suhaimi Abdullah/Getty Images)

சிங்கப்பூரில் இனி கண்காணிப்பின்கீழ் சுயமாக ஆன்டிஜென் ரேபிட் சோதனைகளை (ART) வரும் வாரங்களில் மிக எளிதாகப் மேற்கொள்ள முடியும்.

அடுத்த சில வாரங்களுக்குள் குறைந்தபட்சம் 60 கூடுதல் நிலையங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அத்தகைய நிலையங்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 120ஆக அதிகரிக்கும்.

இரும்புக் கம்பி மொத்தமாக விழுந்ததில் உடல் நசுங்கி வெளிநாட்டு கட்டுமான ஊழியர் மரணம்!

 

தற்போது ​​60 விரைவு சோதனை நிலையங்கள் உள்ளன, அங்கு பயிற்சி பெற்ற பணியாளர்களின் மேற்பார்வையின்கீழ் சுயமாக ART சோதனைகளை பொதுமக்கள் செய்யலாம்.

கட்டணம்

அத்தகைய நிலையங்களில் ஒவ்வொரு சோதனைக்கும் S$15 கட்டணம் வசூல் செய்யப்படும்.

வழக்கமான சோதனை முறையின்கீழ் பணியிடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மற்றும் நிகழ்ச்சிகளுக்கு முந்தைய அல்லது முன்-செயல்பாட்டு சோதனைகளுக்கு அந்த நிலையங்களை பயன்படுத்தலாம்.

பெரிய அளவிலான நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன் பரிசோதனை செய்துகொள்ள விரும்பும் எவரும் இந்த நிலையங்களில் சோதனைக்கு முன்பதிவு செய்யலாம்.

ஊழியர்கள் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில் கூடுதல் விரைவு சோதனை நிலையங்கள் – வரும் வாரங்களில் 120க்கு உயரும்

சிங்கப்பூரில் இருந்து இந்தியா வரும் பயணிகளில் 2 சதவீதம் பேர் PCR சோதனைக்காக தேர்ந்தெடுப்பு