ராமேஸ்வரம் கஃபேவில் தோசையை ரசித்து ருசித்து சாப்பிட்ட சிங்கப்பூர் தூதர்!

ராமேஸ்வரம் கஃபேவில் தோசையை ரசித்து ருசித்து சாப்பிட்ட சிங்கப்பூர் தூதர்!
Photo: Singapore in India

 

ராமேஸ்வரம் கஃபேவில் (Rameshwaram Cafe) தோசையை ரசித்து ருசித்து சாப்பிட்ட சிங்கப்பூர் தூதர் சைமன் வோங். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.

சிங்கப்பூரில் கிரிக்கெட் பயிற்சியில் நடிகர் யோகி பாபு! (வைரலாகும் வீடியோ)

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள புரூக்ஃபீல்டு (Brookefield) சாலையில் அமைந்துள்ளது ராமேஸ்வரம் கஃபே (. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்துச் செல்லும் ராமேஸ்வரம் கஃபேவில், கடந்த மார்ச் 01- ஆம் தேதி அன்று குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தேசிய புலனாய்வு அமைப்பு எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சில நாட்களுக்கு பின்பு ராமேஸ்வரம் கஃபே மீண்டும் திறக்கப்பட்டது. இந்த சூழலில், இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வோங் (High Commissioner Simon Wong), பணி நிமித்தமாக பெங்களூருவுக்கு சென்றார். அங்குள்ள ராமேஸ்வரம் கஃபேவிற்கு தனது தூதரக குழுவினருடன் சென்று விதவிதமான தோசைகள் மற்றும் காஃபியை அருந்தி மகிழ்ந்தார்.

சிறுமியிடம் சில்மிஷ சேட்டை.. உறுப்புகளை புகைப்படம் எடுத்த வெளிநாட்டு ஊழியருக்கு சிறை, பிரம்படி

இது குறித்து சிங்கப்பூர் தூதர் சைமன் வோங், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தூதரக ட்விட்டர் பக்கத்தில், “மீண்டும் திறக்கப்பட்ட ராமேஸ்வரம் கஃபேவில் தோசைகள் மற்றும் காஃபியை சாப்பிட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்; இந்தியாவில் உள்ள எங்கள் நண்பர்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரம் கஃபேவில் தோசையை ரசித்து ருசித்து சாப்பிட்ட சிங்கப்பூர் தூதர்!
Photo: Singapore in India

அத்துடன், ராமேஸ்வரம் கஃபேவில் புகைப்படங்களையும் தனது தூதரக அதிகாரிகளுடன் எடுத்துக் கொண்டார்.