சிங்கப்பூரில் கிரிக்கெட் பயிற்சியில் நடிகர் யோகி பாபு! (வைரலாகும் வீடியோ)

சிங்கப்பூரில் கிரிக்கெட் பயிற்சியில் நடிகர் யோகி பாபு! (வைரலாகும் வீடியோ)
Video Crop Image

 

சிங்கப்பூரில் கிரிக்கெட் பயிற்சி செய்யும் நடிகர் யோகி பாபுவின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிங்கப்பூரில் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் முடிவு – MOM அப்டேட்

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் யோகி பாபு சிங்கப்பூருக்கு வந்துள்ளார். சிங்கப்பூரில் உள்ள ஒரு சிறிய அளவிலான பயிற்சி கூடத்திற்கு சென்ற நடிகர் யோகி பாபு, பவுலிங் செய்தார். எதிர் தரப்பில் இருந்த நபர் பேட்டிங் செய்ய, ஓடிவந்து பந்தை நடிகர் யோகி பாபு வேகமாக வீசினார். இது குறித்த வீடியோவை நடிகர் யோகி பாபு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் எனப்படும் ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மாதாந்திர கார்த்திகையையொட்டி, ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் சிறப்பு பூஜை!

இந்த வீடியோ ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாவதுடன், அவரது ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.