கேட்டரிங் உணவை உண்ட பலருக்கு வயிற்று கோளாறு – SFA விசாரணை

Rasel Catering business operations suspended

உணவு விநியோக நிறுவனம் தயாரித்த உணவை உண்டவர்களில் 284 பேருக்கு வயிறு சம்மந்தப்பட்ட கோளாறுகள் ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

இதனை தொடர்ந்து, ரேசல் கேட்டரிங் (Rasel Catering) நிறுவனத்தின் உணவு வணிக நடவடிக்கைகளை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.

சிங்கப்பூரின் இந்திய படைப்பாளர்களின் கலையை கௌரவிக்கும் “பிரதானா விழா”

கடந்த நவம்பர் 8 மற்றும் நவம்பர் 16 க்கு இடையில் நடந்த இரண்டு சம்பவங்களை சுகாதார அமைச்சகம் (MOH) மற்றும் சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) ஆகியவை விசாரித்து வருவதாக கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.

அதன் உணவை உண்டு பாதிக்கப்பட்ட நபர்களில் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்பதை MOH உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த 284 பேரும் தானாகவே மருந்து எடுத்துக்கொண்டு குணமடைந்ததாக அது மேலும் தெரிவித்தது.

அந்நிறுவனம் 253 பாண்டன் லூப்பில் உள்ளது, அதற்கான தற்காலிக தடை கடந்த நவ.18 முதல் விதிக்கப்பட்டது.

ட்விட்டரில் மீண்டும் இணைந்த டொனால்ட் டிரம்ப் – CEO எலோன் மஸ்க் அனுமதி