‘மெக்டொனால்ட்ஸில் வாங்கிய பர்க்கர் சரியாக வேகவில்லை’- ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பெண்!

'மெக்டொனால்ட்ஸில் வாங்கிய பர்க்கர் சரியாக வேகவில்லை'- ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பெண்!
Photo: Google Maps

 

சிங்கப்பூரில் உள்ள பொங்கோல் பிளாசாவில் (Punggol Plaza) அமைந்துள்ள மெக்டொனால்ட்ஸ் (McDonald’s) உணவகத்திற்கு சென்ற சிங்கப்பூர் பெண் ஒருவர், இறைச்சி சேர்க்கப்பட்ட பர்க்கர்களை (Burgers) வாங்கிக் கொண்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்பு, அதனை சாப்பிட முயன்ற போது, இறைச்சி சரியாக வேகாமல் இருந்துள்ளதையும், பர்க்கர் சரியாக சமைக்கப்படாமல் இருந்துள்ளதையும் கண்டறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

வெளிநாட்டு ஊழியர்களை ஏமாற்றிய பெண்.. தன் நண்பர்களையும் சேர்த்து விட்ட ஊழியர் – சிங்கப்பூரில் வேலைபார்த்த பெண்ணின் ட்ரிக்

பின்னர், இது குறித்து அந்த பெண், டிசம்பர் 04- ஆம் தேதி அன்று தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, அந்த மெக்டொனால்ட்ஸ் உணவகத்தின் மேனேஜர், சம்மந்தப்பட்ட பெண்ணிற்கு ஃபேஸ்புக் பக்கத்தில் பதிலளித்தார். “நீங்கள் வாங்கிய பர்க்கருக்கான முழு தொகையும் திருப்பி வழங்கப்படும். ஏற்கனவே வாங்கி சாப்பிட்ட பர்க்கரால் உடல் நலக்குறைவு ஏற்பட்டால், அதற்கான செலவையும் நாங்களே ஏற்கிறோம். இதுப் போன்று இனி நடக்காது” என்று குறிப்பிட்டிருந்தார்.

சிங்கப்பூர் தந்தையின் LKY100 நாணயங்கள்: சில வங்கிகளில் வெறும் 30 நிமிடங்கள் தீர்ந்தது

எனினும், இந்த சலுகையை ஏற்க மறுத்த பெண், சிங்கப்பூர் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு (Singapore Food Agency) இது குறித்து தகவல் கொடுத்துள்ளார்.