கிருமித்தொற்று இல்லையென அறிவிக்கப்பட்ட தங்கும் விடுதிகளில் புதிய பாதிப்புகள் ஏற்பட காரணம்..?

Singapore dorm covid-19
(Photo: AFP)

COVID-19 தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட தங்கும் விடுதிகளில் மீண்டும் புதிய பாதிப்புகள் மற்றும் குழுமங்கள் ஏற்பட பல காரணங்கள் இருப்பதாக தொற்றுநோய் நிபுணர்கள் CNAவிடம் தெரிவித்துள்ளனர்.

அதாவது நோய்ப்பரவல் இல்லை என்று அறிவிக்கப்படும் விடுதிகளில், எந்தஒரு சம்பவங்களும் அடையாளம் காணப்படவில்லை, அதற்காக நோய்ப்பரவல் முற்றிலும் இல்லை என்பது அதன் பொருளாகாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வேலைவாய்ப்பு அனுமதி (EP) மற்றும் S Pass சம்பள அளவுகோல்கள் உயர்த்தப்படும்: மனிதவள அமைச்சகம்..!

சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்தின், சா ஹோக் (Saw Swee Hock) பொதுச் சுகாதாரப் பள்ளியின் இணைப் பேராசிரியர் அலெக்ஸ் குக் (Alex Cook) கூறுகையில்; கிருமித்தொற்று இல்லை என்றால் என்ன என்பது பற்றி தெளிவாக புரிந்துகொள்வது முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

“விடுதிகளில் மீதமுள்ள தொற்றுநோய்கள் எதுவும் அடையாளம் காணப்படமால் இருக்கும். அதற்காக நோய்த்தொற்றுகள் எதுவும் இல்லை என்பது அர்த்தமல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

எடுத்துக்காட்டாக, தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட ஒரு அல்லது இரு நாட்களுக்கு முன் அங்கு ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம். ஆனால் சோதனையில் தொற்று இல்லை என்று வந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தபட்ட பெரும்பாலான குடியிருப்பாளர்கள் பாதிக்கப்படாவிட்டாலும், பாதிக்கப்பட்ட சில குடியிருப்பாளர்கள் வெளியே தங்க அனுமதிக்கப்பட்டிருப்பார்கள், அங்கு அவர்கள் மற்ற தங்கும் விடுதி அல்லது சமூகத்தில் வாழும் ஊழியர்களுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

இந்த கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரின் உடலில் கிருமி அளவும் அதிகம் இல்லாத காரணத்தால், கிருமி எளிதாக அடையாளம் காணப்படுவதில்லை என்று மவுண்ட் அல்வேர்னியா மருத்துவமனையின் டாக்டர் Piotr Chlebicki தெரிவித்தார்.

இருப்பினும், தங்கும் விடுதிகளில் மீண்டும் நோய்ப்பரவல் ஏற்படுவதைத் தடுக்க, தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருவதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் தொடர்ந்து சோதனை செய்ய திட்டம் – மனிதவள அமைச்சர்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg