கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் தொடர்ந்து சோதனை செய்ய திட்டம் – மனிதவள அமைச்சர்..!

New COVID-19 cases at dormitories detected by routine testing is 'part of the plan': Josephine Teo
New COVID-19 cases at dormitories detected by routine testing is 'part of the plan': Josephine Teo (Photo: Facebook/Lawrence Wong)

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் காணப்படும் புதிய COVID-19 தொற்று பாதிப்புகள் வழக்கமான சோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்படுகின்றன என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் தியோ தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பாதிப்புகள் நோய்க்கட்டுப்பாடு திட்டத்தின் ஒரு பகுதியாக வெளிவருகின்றன என்றும் ஜோசபின் தியோ புதன்கிழமை (ஆகஸ்ட் 26) அன்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : சென்னை விமான நிலையத்தை புறக்கணிக்கும் தமிழக பயணிகள்…!

கட்டுமான, கடல் மற்றும் உற்பத்தி துறையில் உள்ள ஒவ்வொருவருக்கும், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் வருபவர்களுக்கும் தொடர்ந்து சோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த கிருமித்தொற்று கண்டுபிடிப்புகள் அந்த சோதனைகளின் விளைவாக கண்டறியப்படுகின்றன என்றும் திருமதி தியோ கூறினார்.

சிங்கப்பூரில் நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட சுமார் 56,000 பேரில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர்கள் ஆவார்கள்.

நோய்க்கட்டுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சோதனைகளை மேற்கொள்கிறோம், அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பாதிப்புகள் உறுதிசெய்யப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை, அமெரிக்க மருத்துவ தொழில்நுட்ப நிறுவனத்தைப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களிடம் பேசிய திருமதி தியோ அதனை தெரிவித்தார்.

இந்த சோதனையின் மூலம், பாதிப்பு குழுமங்களை முன்கூட்டியே அடையாளம் காணலாம், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு தகுந்த பராமரிப்பு வழங்கப்படலாம் மற்றும் அவர்களின் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கும் நோய் பரவுதை கட்டுப்படுத்த தனிமைப்படுத்தப்படலாம், என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து அடுத்த மாதம் முதல் தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg