தேவை உடையவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டம்.!

Redhill Food Centre program
Pics: Melvin Yong and Kenny Ang / FB

சிங்கப்பூரில் உள்ள ரெட்ஹில் உணவு நிலையங்களில் வாடிக்கையாளர்கள், தேவை உடையவர்களுக்கு இலவசமாக உணவு வாங்கிக்கொடுக்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

கொரோனா கிருமிப்பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள உணவு நிலைய கடைக்காரர்கள் மற்றும் தேவை உடையவர்களுக்கும் இதன் மூலம் உதவ முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களுக்கு உணவு வாங்கும் போது, தேவையுடையோருக்கும் பானமோ அல்லது உணவோ வாங்கிக் கொடுக்கலாம், அதற்காக வாடிக்கையாளர்கள் கொஞ்சம் கூடுதலாக பணம் செலுத்த வேண்டும்.

தீமிதித் திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு!

வாடிக்கையாளர்கள் தேவையுடையவருக்கு உணவு வாங்கியிருப்பது, கடைகளின் முகப்பில் உள்ள பலகையில் சிறு காந்த வில்லையால் குறிக்கப்பட்டிருக்கும்.

Pic: Malvin Yong/FB

தேவையுடையோர், பலகையில் உள்ள காந்த வில்லையை கடைக்காரரிடம் எடுத்துக் கொடுத்து, அந்தக் கடையிலிருந்து இலவசமாக உணவை பெற்றுக்கொள்ளலாம்.

உணவங்காடிகளில் சிலருக்கு வியாபாரம் 70 விழுக்காடு வரை குறைந்துள்ள நிலையில், இந்த திட்டம் மூலம் அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில், 49 கடைகள் சேர்ந்துள்ளதாக ராடின் மாஸ் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், திரு. மெல்வின் யோங் (Melvin Yong) தெரிவித்துள்ளார்.

பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராகும் சிங்கப்பூர்! மாறும் பருவநிலையே காரணம்