தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்த இரு நாடுகளைச் சேர்ந்த 2,322 பயணிகள் சிங்கப்பூர் வர அனுமதி!

singapore air-ticket-prices-up-departing-flights
Pic: File/Reuters

ஜெர்மனி, புரூணை ஆகிய நாடுகளைச் சேர்ந்த COVID-19க்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொண்ட  சுமார் 2,322 பயணிகள் சிங்கப்பூருக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதை திட்டத்தின்கீழ் இந்த இரு நாடுகளிலிருந்து வரும் யணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கோவிட்-19 சுயபரிசோதனை கருவியைப் பெற, 100 இயந்திரங்கள் அமைக்கப்பட்டது!

மேலும், புதிய பயண ஏற்பாட்டின்கீழ், விண்ணப்பம் செய்யப்படும் முறை தொடங்கி 16 நாட்களில் சிங்கப்பூருக்கு வர இவர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இரவு 11.59 மணி நிலவரப்படி, ஜெர்மனியை சேர்ந்த 2,241 பயணிகளுக்கும், புருணையைச் சேர்ந்த 81 பயணிகளுக்கும் இந்த மாதம் 8ம் தேதிக்கும் அடுத்த மாதம் 22ம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆயர் ராஜா உணவகத்தில் கிருமித்தொற்று பாதிப்பு; உணவகத்தை மூட உத்தரவு.!