சிங்கப்பூரில் அடுத்த மாதம் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை…!

reopening of temple in singapore after circuit breaker
reopening of temple in Singapore after circuit breaker

சிங்கப்பூரில் சர்க்யூட் பிரேக்கர் திட்டம் வரும் ஜூன் 2 ஆம் தேதி முதல் தளர்த்தப்படும் போது இந்து கோவில்கள் மீண்டும் திறக்கப்படும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் ஜூன் 2 முதல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்

குடும்பங்கள்

கோவிலுக்குள் வழிபாடு செய்ய ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் வரை ஒரே நேரத்தில் அனுமதிக்கப்படுவர். அதாவது ஐந்து பேருக்கு குறைவாக இருந்தால் அவர்கள் ஒரு குடும்பமாகக் கருதப்படுவார்கள். மேலும் அவர்கள் ஒரே முகவரியில் வசிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போன்று 5 குடும்பங்கள் வரை கோவிலுக்குள் வழிபாடு செய்யலாம். ஆனால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இடையே பாதுகாப்பான இடைவெளி இருப்பது அவசியம். வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துறவாட அனுமதி இல்லை.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் 1,300-க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்..!

கோவில் அர்ச்சகர் மற்றும் ஊழியர்கள்

இதில் குறிப்பாக கோவிலுக்குள் வரும் பக்தர்கள் அங்கு செலவிடும் நேரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

கோவில் அர்ச்சகர் மற்றும் அங்குள்ள ஊழியர்கள் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிப்பது அவசியம் ஆகும்.

சமயச் சேவை

கோவில்களில் வழங்கப்படும் சமயச் சேவைகளில் கட்டுப்பாடுகள் இருக்கும்

முன்கூட்டியே பதிவுசெய்து கொண்ட பக்தர்கள் மட்டுமே, சில ஆலயங்களில் சமயச் சேவைகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.

மேலும் பக்தர்கள் நேரடியாக வருவதை சில ஆலயங்கள் அனுமதிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்புகள்

கோவிலுக்குள் நுழையும் முன் அனைத்து பக்தர்கள்களும் SafeEntry மூலம் பதிவு செய்வது கட்டாயம்.

சோதனையின் போது உடல்வெப்பநிலை 37.5 டிகிரிக்கு அதிகமாக இருந்தால் அனுமதி மறுக்கப்படும்.

முகக் கவசம் அணிவது கட்டாயம்.

தீர்த்தம், விபூதி, குங்குமம், துளசி ஆகியவற்றை பக்தர்களின் கைகளில் நேரடியாக வழங்கக்கூடாது.

காளாஞ்சி, பிரசாதம் பக்தர்களிடம் நேரடித் தொடர்பின்றி வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Seithi MediaCorp

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பயணக் கட்டுப்பாடுகள் நீங்கினாலும், அத்தியாவசிய பயணம் மட்டுமே பரிசீலிக்கப்படும்..!

#when is phase 2 #when is phase 2 singapore #when is phase 2 of circuit breaker phase 3 singapore cb phase 1 2 3 #singapore phase 1 2 3 phase 2 of circuit breaker