சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சரைச் சந்தித்த தென் கொரிய அமைச்சர்!

Photo: Defence Minister Ng Eng Hen Official Facebook Page

தென் கொரிய நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் சூ வூக் (Republic of Korea’s Minister of National Defense Suh Wook) இரண்டு நாள் அரசுமுறை பயணமாக, டிசம்பர் 22- ஆம் தேதி அன்று சிங்கப்பூர் வந்திருந்தார். அதைத் தொடர்ந்து, டிசம்பர் 23- ஆம் தேதி அன்று காலை சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென்னை (Minister for Defence Dr Ng Eng Hen) நேரில் சந்தித்துப் பேசினார். முன்னதாக, பாதுகாப்புத்துறையின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அமைச்சர், பின்னர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விருந்தினர் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

இந்தியாவின் 75- வது சுதந்திர தின கொண்டாட்டம்: வினாடி- வினா போட்டியில் பங்கேற்க வெளிநாட்டு வாழ் இந்திய இளைஞர்களுக்கு அழைப்பு!

இச்சந்திப்பு குறித்து சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சகம் (Ministry of Defence in Singapore) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென்னை தென் கோரிய பாதுகாப்புத்துறை அமைச்சர் சூ வூக் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். அவர்களது சந்திப்பின் போது, ​​இரு நாடுகளுக்கும் இடையே வலுவான பாதுகாப்பு உறவுகளை பேணுவதன் முக்கியத்துவத்தை டாக்டர் இங் எங் ஹென் மற்றும் சூ மீண்டும் உறுதிப்படுத்தினர்.

இரு தரப்பினரும் பிராந்திய பாதுகாப்பு முன்னேற்றங்கள் மற்றும் இரசாயன (Chemical), உயிரியல் (Biological), கதிரியக்கவியல் (Radiological), அணு மற்றும் வெடிபொருட்கள் (Nuclear and Explosives) (CBRNE) பாதுகாப்பு, மனிதாபிமான உதவி (Humanitarian Assistance) மற்றும் பேரிடர் நிவாரணம் ( Disaster Relief), இணைய பாதுகாப்பு (Cybersecurity) மற்றும் மூலோபாய தகவல் தொடர்பு (Strategic Communications) போன்ற இருதரப்பு, பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தக்கூடிய பகுதிகள் குறித்து கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.

மீண்டும் திறக்கப்பட்டது பிரபல ‘i12 Katong’ மால்!

தென் கொரிய பாதுகாப்புத்துறை அமைச்சர், RSS சிங்கபுரத்தில் உள்ள சிங்கப்பூர் கடற்படையின் தகவல் இணைவு மையத்தை (Singapore Navy’s Information Fusion Centre) பார்வையிட்டார். அதன் தொடர்ச்சியாக, சாங்கி கடற்படைத் தளத்திற்கு சென்ற அமைச்சர், “பிராந்திய அமைதி மற்றும் செழுமைக்கான கொரியாவின் பங்கு” என்ற தலைப்பில் ராஜரத்தினம் ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸில் (S.Rajaratnam School of International Studies- ‘RSIS’) நடந்த நிகழ்ச்சியில் சிறப்புமிக்க உரையாற்றினார்.

சிங்கப்பூருக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான நட்புரீதியான இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை சூவின் வருகை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது”. இவ்வாறு பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெம்பனீஸ் சந்திப்பில் 6 வாகனங்கள் விபத்து: ஒருவர் மரணம், 4 பேர் காயம் – (பதைபதைக்கும் விபத்து வீடியோ)

இதனிடையே, தென் கொரிய பாதுகாப்புத்துறை அமைச்சர் சூ வூக் இரண்டு நாள் அரசுமுறை பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.