சிங்கப்பூரில் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள் – வர்த்தக நிகழ்வுகளில்…

(Photo Credit: Business Times)

நேரடி நிகழ்ச்சிகளை நடத்தும் நியமிக்கப்பட்ட இடங்களில், நிகழ்வுக்கு முன் சோதனையுடன் சுமார் 750 பேர் வரை அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வுக்கு முந்தைய சோதனையை மேற்கொள்ளாவிட்டால் 250 பங்கேற்பாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள் – தெரிந்து கொள்வோம்!

வர்த்தக நிகழ்வுகள்

சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தால் (STB) அங்கீகரிக்கப்பட்ட Business-to-Business வர்த்தக நிகழ்வுகளில் 250 பேர் கலந்துகொள்ளலாம்.

தலா 50 பேர் வரை கொண்ட குழுக்களாக அவர்களை பிரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வுக்கு முன் பரிசோதனை மேற்கொண்டால், 750க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இந்நிகழ்வுகளில் அனுமதிக்கப்படும்.

STB புதுப்பிக்கப்பட்ட விதிகள் மற்றும் பயன்பாட்டு விவரங்களை பின்னர் வெளியிடும்.

விளையாட்டு நிகழ்வுகள்

முன்னோடித் திட்டத்தின் ஒரு பகுதியாக விளையாட்டு நிகழ்வுகள், அதே போல முன் பரிசோதனையுடன் மேற்கொள்ளப்பட்டால் 750 பார்வையாளர்கள் வரை அனுமதிக்கப்படும்.

பரிசோதனை இல்லாமல் 250 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

தேசிய விளையாட்டு அமைப்பான ஸ்போர்ட் சிங்கப்பூர் பின்னர் இது குறித்த கூடுதல் விவரங்களை வெளியிடும்.

COVID-19 தடுப்பூசி திட்டம் தற்போது 45 முதல் 59 வயதுடையவர்களுக்கு துவக்கம்