ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும்போது விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு கடுமையான தண்டனை..!

retrenchments Jobs rules
(PHOTO: Reuters)

நிறுவங்கள் தங்களின் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும்போது திருத்தம் செய்யப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், தவறினால் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை பின்பற்றத் தவறும் நிறுவனங்களின் வேலை அனுமதி சலுகைகள் தடைசெய்யப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் கொரோனா: 50-க்கும் குறைவானவர்கள் சமூக தனிமைப்படுத்தும் வசதிகளில் பராமரிப்பு..!

அதோடு மட்டுமல்லாமல், இதுபோன்று தவறிழைக்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அரசாங்க ஆதரவுகள் நிராகரிப்பு செய்யப்படலாம் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

திருத்தம் செய்யப்பட்ட விதிமுறைகள்

முடிந்தவரை அதிக நாட்களுக்கு முன்னரே, ஆட்குறைப்பு செய்யப்படும் ஊழியர்களுக்கு அது குறித்த தகவலை தெரிவிக்க வேண்டும்.

அந்த தகவல் தெரிவிப்பின் போது, மனிதவளப் பிரிவு அதிகாரி அல்லது தொழிற்சங்கப் பிரதிநிதி ஒருவர் இருக்க வேண்டும்.

புகார்கள்

ஆட்குறைப்புக்கு ஆளான ஊழியர்கள், அந்த ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்து செய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்றவற்றை கையாளுவதற்கு தேவையானவற்றை, அரசாங்கம், முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கம் ஆகியவை இணைந்து ஆலோசனை அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் 2ஆம் காலாண்டில், ஆட்குறைப்புக்கு எண்ணிக்கை, முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இரு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஆட்குறைப்பு காரணமாக வேலை இழந்தவர்களுக்குப் புதிய வேலைகள், பயிற்சி போன்ற ஆதரவும் வழங்க ஊக்குவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவிகளை வழங்க Here With you ஹெல்ப்லைன்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…