அதிக நம்பிக்கை வாய்ந்த ரயில் சேவை: SBS ட்ரான்சிட் நிறுவனத்திற்கு S$30 மில்லியன் வெகுமதி!

(Photo:Railway-News)

SBS ட்ரான்சிட் நிறுவனத்திற்கு கடந்த ஆண்டில் அதிக நம்பிக்கை வாய்ந்த ரயில் சேவையை நடத்தியதற்காக சுமார் S$30 மில்லியன் வெகுமதியாக வழங்கப்பட்டுள்ளது.

இது போன்ற வெகுமதிகள் வழங்குவது இதுவே முதல் முறை, இதனை நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) வழங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

போதைப்பொருள், போக்குவரத்து விதிமீறல் – தப்பியோடிய ஆடவர் கைது

இந்த நிறுவனத்தின் போக்குவரத்து வருவாய் 13.6 சதவீதமாக குறைந்திருந்த நிலையில், இந்த சலுகையானது சரிவிலிருந்து மீண்டு வருவதற்கு உதவியாக இருப்பதாய் இந்நிறுவனத்தின் தலைவர் லிம் ஜிட் போ கூறியுள்ளார்.

வடக்கு-கிழக்கு ரயில் பாதை, டௌன்டவுன் ரயில் பாதை ஆகியவற்றில் நம்பகத்தன்மைமிக்க சேவைகளை SBS நிறுவனம் வழங்கியதாக கூறப்பட்டுள்ளது.

ரயில் சேவையை வழங்குவதில் SMRT என்ற மற்றொரு நிறுவனம் வடக்கு தெற்கு ரயில் பாதை, கிழக்கு மேற்கு ரயில் பாதை மற்றும் வட்ட ரயில் பாதை ஆகியவற்றில் சேவையாற்றி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

பல மில்லியன் வெள்ளி செலவில் வடக்கு தெற்கு மற்றும் கிழக்கு மேற்கு ஆகிய ரயில் பாதைகள் புதுப்பிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஒரு நாட்டுடன் பயணத்தை மீண்டும் தொடங்க சிங்கப்பூர் ஆய்வு!