மேலும் ஒரு நாட்டுடன் பயணத்தை மீண்டும் தொடங்க சிங்கப்பூர் ஆய்வு!

Singapore travel
(Photo: AFF/Roslan Rahman)

சிங்கப்பூர் மாற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பயணங்களை எவ்வாறு மீண்டும் தொடங்கலாம் என்று ஆராய்ந்து வருவதாக சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பியூஜியனில் இரண்டு நாள் பயணத்தின் முடிவில் பேசிய டாக்டர் பாலகிருஷ்ணன் அதனை தெரிவித்தார்.

நியூ அப்பர் சாங்கி சாலையில் கார் மோதி ஒருவர் உயிரிழப்பு

அங்கு அவர் சீனாவின் மாநில கவுன்சிலரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யியை சந்தித்து கலந்துரையாடினார்.

சிங்கப்பூர்-சீனா ஆகிய 2 நாடுகளும் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் துவங்கியது போல, மெதுவாகவும், படிப்படியாகவும், கவனமாகவும் பயணங்களை மீண்டும் தொடங்க முடியும் என்று டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார்.

அந்த பயணத்தில் முக்கியமாக, இருநாடுகளிலும் பரஸ்பர சுகாதார சான்றிதழ் அங்கீகாரம் பற்றி அவர்கள் விவாதித்தனர்.

சிங்கப்பூரில் ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களின் வானிலை எப்படி இருக்கும்?