‘அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா’- விலக்கு கோரும் சிங்கப்பூர்!

'அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா'- விலக்கு கோரும் சிங்கப்பூர்!
Photo: Singapore Food Agency

 

 

கடந்த ஜூலை 21- ஆம் தேதி அன்று இந்திய அரசு பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதனால் சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், சிரியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரைச் சந்தித்த சிங்கப்பூர் அமைச்சர்!

இந்த நிலையில், சிங்கப்பூர் உணவு அமைப்பு (Singapore Food Agency) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “பாசுமதி அல்லாத அரிசி மீதான இந்தியாவின் ஏற்றுமதி தடையைத் தொடர்ந்து, பல்வேறு வகையான அரிசிகளை இறக்குமதி செய்வதற்கு ஏதுவாக, அரிசி இறக்குமதியாளர்களிடம் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். அதேபோல், தடையில் இருந்து விலக்கு பெறுவதற்காக சிங்கப்பூரும், இந்திய அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது.

சிங்கப்பூர் 30- க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்கிறது. சிங்கப்பூர் இறக்குமதி செய்யும் அரிசியில், இந்தியாவின் பாசுமதி அல்லாத அரிசி 17% ஆக இருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022- ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து சுமார் 40% அரிசியை சிங்கப்பூர் இறக்குமதி செய்துள்ளது. சிங்கப்பூரில் தற்போது அரிசி விற்பனையும், விநியோகமும் சீராக இருப்பதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

‘Singdollar’ காசோலை குறித்து சிங்கப்பூர் நாணய ஆணையமும், சிங்கப்பூர் வங்கிகள் சங்கமும் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பாசுமதி அல்லாத அரிசிக்கு விதிக்கப்பட்டத் தடையை நீக்குமாறு, இந்திய அரசுக்கு சர்வதேச நிதியம், பல்வேறு உலக நாடுகளும் வலியுறுத்தியுள்ளனர்.