35 ஆண்டுகளுக்கு முன் நடந்த கலவரம்.. அப்போது வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய ஆடவர்.. சிங்கப்பூர் வந்தபோது கைது

riot 1988 headman arrested jailed
(Photo: TODAY)

வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற ரகசிய குழுவின் தலைவர் 35 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பிடிபட்டுள்ளார்.

1988 ஆம் ஆண்டு மற்றொரு கும்பலுடன் நடந்த பயங்கர கலவரத்தில் இவருக்கு தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கடை திருட்டில் ஈடுபட்ட 4 இந்தியர்களுக்கு சிறை – சிலர் சிங்கப்பூரை விட்டு எஸ்கேப்

சண்டையில் ஒரு இளையரின் மரணத்தைப் பற்றி தகவல் அறிந்ததும் அவர் மலேசியாவுக்குத் தப்பிச் சென்றார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூருக்கு திரும்பாமல் இருந்த சிங்கப்பூரர் லீ கோ யோங், மருத்துவப் பிரச்சனை காரணமாக இந்த ஆண்டு மார்ச்சில் சிங்கப்பூர் திரும்பியபோது அதிகாரிகளிடம் சரணடைந்தார்.

இந்நிலையில், கலவரம் தொடர்பான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு கடந்த நவம்பர் 22 அன்று மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த சண்டையில் ஈடுபட்ட இவரின் கும்பலைச் சேர்ந்த 13 பேர் முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

தற்போது 65 வயதாகும் லீ, வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவரை சந்திக்க முடியாததால், வேறு வழியில்லாமல் மருத்துவப் பரிசோதனைக்காக சிங்கப்பூர் திரும்ப முடிவு செய்தார்.

1988ல் நடந்த இந்த கலவரத்திற்காக, ஒரு குற்றவாளிக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படலாம்.

லீக்கு 50 வயதுக்கு மேல் இருப்பதால் அவருக்கு பிரம்படி விதிக்க முடியாது.

சிங்கப்பூர் தமிழர்களின் இதய நாயகன்.. நிகரில்லா தலைவரின் 100வது பிறந்தநாள் நாணயம் – வெளிநாட்டு ஊழியர்கள் எப்படி பெறுவது?