சிங்கப்பூரில் கலவரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் 5 பேர் கைது!

North Bridge Road rioting
Image Represent

சிங்கப்பூரில் கலவரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் 5 பேர் நேற்று திங்கள்கிழமை (நவ. 16) கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறை செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

நார்த் பிரிட்ஜ் ரோட்டில் பிளாக் 9, கீழ்த்தளத்தில் 61 வயதான ஆடவர் மயக்கமடைந்து ரத்தப்போக்குடன் காணப்பட்டனர்.

சிங்கப்பூரில் இந்த மாதத்தின் இரண்டாம் பாதியின் வானிலை நிலவரம்.

இதனை அடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9.50 மணியளவில் காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், அவர் டான் டோக் செங் (Tan Tock Seng) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மத்திய காவல்துறை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் 21 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட ஐந்து பேரின் அடையாளங்களை கண்டறிந்து நேற்று கைது செய்தனர்.

“முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட ஆடவர், அந்த ஐவரில் ஒருவருக்குத் தெரிந்தவர் என்பது தெரியவந்துள்ளது, மேலும் தகராறு காரணமாக பாதிக்கப்பட்டவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது,” என்று காவல்துறை தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இந்த 5 பேர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிக்கு, ஏழு ஆண்டுகள் வரை சிறை, பிரம்படியும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் 4 ஆடவர்கள் சம்பந்தப்பட்ட சண்டை காணொளி: உண்மையை வெளியிட்ட ஆடவர்

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…