சிங்கப்பூரில் கனமழை: திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் – எச்சரிக்கை

Pub flash flood warning
Pic: SGRV/FB

சிங்கப்பூர் முழுவதும் இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 31) காலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால், மத்திய-மேற்கு சிங்கப்பூரில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக PUB எச்சரித்துள்ளது.

காமன்வெல்த் லேன் மற்றும் காமன்வெல்த் டிரைவ் ஆகிய இடங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளதாக PUB எச்சரிக்கை செய்துள்ளது.

சிங்கப்பூர் வரும் பயணியா நீங்க?? – அப்போ உங்களுக்கு தான் இந்த தகவல்!

அப்பகுதியில் வடிகால் மற்றும் கால்வாய்கள் முழு கொள்ளளவை கிட்டத்தட்ட நெருங்கி விட்டதாக PUB ட்வீட் செய்துள்ளது.

அதாவது, வடிகால் மற்றும் கால்வாய்களில் நீர் மட்டம் 90 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளதாகவும், ஆனால் காலை 11.10 மணியளவில் 90 சதவீதத்திற்கும் குறைவாக குறைந்துள்ளதாகவும் PUB தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதைக சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் (MSS) முன்கணித்தது.

தற்போது, வெள்ளிக்கிழமை வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் வரை குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

“ரெட் லைட்” சிக்னலை மதிக்காமல் சென்ற ஓட்டுநர் – கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த எதிர்மறை விளைவு (காணொளி)