ரிவர் வேலி உயர்நிலைப்பள்ளி சம்பவம்: மாணவனுக்கு எப்படி கோடாரி கிடைத்தது? – அமைச்சர் விளக்கம்

(Photo: Ashley Tan)

ரிவர் வேலி உயர்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவரின் மரண சம்பவத்தின்போது கைப்பற்றப்பட்ட கோடாரி ஆன்லைனில் வாங்கப்பட்டதாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன என்று சட்ட, உள்துறை அமைச்சர் கே.சண்முகம் இன்று (ஜூலை 20) தெரிவித்தார்.

13 வயது மாணவனை பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு கழிப்பறையில் கொலை செய்ததாக 16 வயது மாணவன் மீது இன்று காலை குற்றம் சாட்டப்பட்டது.

ரிவர் வேலி உயர்நிலைப்பள்ளியில் 13 வயது சிறுவன் மரணம் – 16 வயது மாணவர் மீது கொலை குற்றச்சாட்டு

16 வயது சிறுவனுக்கு எப்படி கோடாரி கிடைத்தது? என்பது குறித்து கேள்விகள் எழுந்திருப்பதாக திரு சண்முகம் தன்னுடைய பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

முதற்கட்ட விசாரணைகள் மூலம் அந்த கோடரி ஆன்லைனில் வாங்கப்பட்டதாக இருக்கலாம், ஆனால் விசாரணைகள் முடிந்த பின்னரே முழு உண்மைகளையும் தெரியும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் திரு சண்முகம் கூறுகையில்: பள்ளியிலிருந்து பெற்றோருக்கு கிடைக்கக்கூடிய மிக மோசமான தகவலில் ஒன்று, தங்கள் குழந்தை கொல்லப்பட்டதைக் கேட்பது என்று வருத்தம் தெரிவித்தார்.

பாதுகாப்பு பொதுவாக உறுதிசெய்யப்பட்ட ஒன்று என்பதால், இது முற்றிலும் அதிர்ச்சியளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உணவு, பானத் துறைகளில் முடுக்கிவிடப்படும் கட்டுப்பாடுகள் – வர்த்தகர்கள் அதிருப்தி