ரிவர் வேலி உயர்நிலைப்பள்ளியில் 13 வயது சிறுவன் மரணம் – 16 வயது மாணவர் மீது கொலை குற்றச்சாட்டு

(Photo: Ashley Tan)

ரிவர் வேலி உயர்நிலைப்பள்ளியில் (ஆர்.வி.எச்.எஸ்) பயிலும் 13 வயது மாணவரை நேற்று (ஜூலை 19) கொலை செய்ததாக சந்தேகத்தின்பேரில் 16 வயது மாணவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

காலை 11.40 மணியளவில், உதவிக்கு அழைப்பு வந்ததாகவும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றபோது 13 வயது சிறுவன் கழிவறையில் பல காயங்களுடன் அசைவில்லாமல் கிடந்ததைக் கண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த ஊழியர்களுக்கு படிப்படியான சம்பள உயர்வு

அந்த சிறுவன் இறந்துவிட்டதாக, சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை துணை மருத்துவரால் அறிவிக்கப்பட்டது. சிறுவனை தாக்கிய இளையர் கைது செய்யப்பட்டார் மற்றும் ஆதாரமாக ஒரு கோடாரி கைப்பற்றப்பட்டது.

அந்த இருவருமே முன்னர் அறிமுகம் இல்லாதவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், காவல்துறையினர் தாக்குதலுக்கான நோக்கம் குறித்து தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த இளையர் மீது செவ்வாய்க்கிழமை இன்று கொலை வழக்கு பதிவு செய்யப்படும் எனவும், பின்னர் அவரை மனநல மதிப்பீட்டிற்காக ரிமாண்ட் செய்ய நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு பெறப்போவதாக காவல்துறை நேற்று தெரிவித்தது.

கல்வி அமைச்சகம் (MOE) மற்றும் ரிவர் வேலி உயர்நிலைப்பள்ளி ஆகியவை தங்கள் மாணவர்களில் ஒருவரை இழந்ததால் தாங்கள் மிகுந்த வருத்தமடைந்துள்ளதாகவும், இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்திற்கு முழு ஆதரவை அளித்து வருவதாகவும் கூறினர்.

பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்கி உள்ளதாக தெரிவித்தனர்.

கல்வி அமைச்சர் சான் சுன் சிங் முகநூல் பதிவில், பள்ளியில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளதாகவும், பள்ளிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க பெற்றோர்களுடனும் மாணவர்களுடனும் இணைந்து பணியாற்ற இருக்கிறோம், மேலும் குழந்தைகள் நம்பகமான சூழலில் ஒன்றாகக் வளர கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது பற்றிய புலனாய்வு தொடர்கிறது.

சிங்கப்பூருக்கான இந்தியாவின் ஏற்றுமதி 24% உயர்வு!