சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல லாலுவுக்கு அனுமதி!

Photo: Lalu Prasad Yadav Official Twitter Page

ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004- ஆம் ஆண்டு முதல் 2009- ஆம் ஆண்டு வரை மத்திய ரயில்வேத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது, ஐஆர்சிடிசியின் இரண்டு ஓட்டல்களை பராமரிக்க தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அதற்கு கைமாறாக, சம்மந்தப்பட்ட நிறுவனம், லாலுவுக்கு மூன்று ஏக்கர் நிலத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, அவரது மகனும் தற்போதைய பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

செம்பவாங் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

அத்துடன், லாலு பிரசாத் யாதவ் மீது மாட்டுத்தீவனம் ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்த நிலையில், அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், லாலுவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு கடந்த 2018- ஆம் தேதி அன்று டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இதனால் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் நீதிமன்றம் வசம் இருந்தன.

உடனடியாக உங்கள் WhatsApp செயலியை புதுப்பியுங்கள் – சிங்கப்பூர் அவரச அறிவிப்பு

இந்த நிலையில், உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு செல்ல அனுமதி கோரியும், தனது பாஸ்போர்ட்டைத் திரும்ப ஒப்படைக்கக் கோரியும், லாலு பிரசாத் யாதவ் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று (28/09/2022) விசாரணைக்கு வந்த போது, மனுவை விசாரித்த நீதிபதி கீதாஞ்சலி கோயல், வரும் அக்டோபர் 10- ஆம் தேதி முதல் அக்டோபர் 25- ஆம் தேதி வரை சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சைப் பெற்று திரும்ப அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.