சிங்கப்பூரில் உள்ள தனது கடைசி இரண்டு கடைகளை மூடும் ராபின்சன்ஸ்.!

Robinsons close last 2 stores
Pic: Robinson

சிங்கப்பூரில் கடந்த சுமார் 162 ஆண்டுகளாக வர்த்தகம் செய்து வந்த ராபின்சன்ஸ் சில்லறை விற்பனைக் குழுமம் ஆர்ச்சர்ட் சாலை, ராஃபிள்ஸ் சிட்டி ஆகிய வட்டாரங்களில் உள்ள தனது கடைசி இரண்டு கடைகளையும் மூடுவதாக நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.

கடைத்தொகுதிகளின் உரிமையாளர்களுடன் பேசி வருவதாகவும், அடுத்த சில வாரங்களுக்குத் தொடர்ந்து இயங்க விரும்புவதாகவும் ராபின்சன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சட்டம் மற்றும் ஒழுங்கு குறியீட்டில் சிங்கப்பூர் முதலிடம்..!

தனது கடைசி இரண்டு கடைகளையும் மூட உள்ள நிலையில், சிங்கப்பூரின் ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள தி ஹீரன் கடைத்தொகுதியில் உள்ள ராபின்சன்ஸ் கடை திறப்பதற்கு முன்பாகவே 300 பேர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கொரோனா வைரஸ் அபாயத்தால் கடைக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு இடையே குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளியாவது இருக்கவேண்டும் என்று வரிசையில் நின்றவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

சிங்கப்பூரில் 300,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு கண் பராமரிப்பு திட்டம்..!

சிங்கப்பூரில் உள்ள ராபின்சன்ஸ் கடைக்கு கிட்டத்தட்ட 175 ஊழியர்கள் உள்ளனர். துபாயில் உள்ள அல் ஃபுத்தாயிம் குழுமத்தின்கீழ் ராபின்சன்ஸ் உட்பட மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர், ஸாரா போன்ற பிரசித்திபெற்ற நிறுவனங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிறுவனங்களுக்கு ஊழியர்களை இடமாற்றம் செய்ய தன்னால் ஆன அனைத்தையும் செய்ய திட்டமிட்டுள்ளதாக ராபின்சன்ஸ் நிர்வாகம் கூறியுள்ளது.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…