சட்டம் மற்றும் ஒழுங்கு குறியீட்டில் சிங்கப்பூர் முதலிடம்..!

Singapore Ranks Gallups
Photo Credit : Singapore Police Force's Facebook

சிங்கப்பூரில் மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக கருதுவதால், Gallup’s சட்டம் மற்றும் ஒழுங்கு குறியீட்டில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.

சட்டம் ஒழுங்கு குறித்த உலகளாவிய ஆய்வில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது, சீனா 3வது இடத்திலும், நார்வே 6வது இடத்திலும் மற்றும் சுவிட்சர்லாந்து 6வது இடத்திலும் உள்ளது.

2020 Gallup Global Law and Order Report.

சிங்கப்பூர் தீமிதித் திருவிழா 2020: நேரடி ஒளிபரப்பு.

இரவில் பாதுகாப்பான உணர்வு

உலகளாவிய சராசரியான 69 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, ​​சிங்கப்பூர் மக்கள் 97 சதவீதம் பேர் தங்கள் பகுதியில் இரவில் தனியாக நடப்பதை பாதுகாப்பாக உணர்வதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேபோன்று, 2019 அறிக்கையிலும் சிங்கப்பூர் முதலிடத்தில் இருந்தது குறிபிடத்தக்கது.

அக்டோபர் 27 அன்று Gallup’s வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த சட்டம் மற்றும் ஒழுங்கு அட்டவணை என்பது உள்ளூர் காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கை.

சிங்கப்பூரில் 300,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு கண் பராமரிப்பு திட்டம்.

மக்களின் நம்பிக்கை

மேலும், தனிப்பட்ட பாதுகாப்பு உணர்வுகள் மற்றும் கடந்த ஆண்டில் திருட்டு மற்றும் தாக்குதல் அல்லது மோசடி சம்பவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு கூட்டு மதிப்பெண் ஆகும்.

ஒவ்வொரு நாட்டிலும் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சுமார் 1,000 பேருடன் தொலைபேசி மற்றும் நேருக்கு நேர் நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த குறியீட்டில் 2015 முதல் சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமானங்களின் கட்டணங்கள் உயர்வு.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…