சிங்கப்பூர் தீமிதித் திருவிழா 2020: நேரடி ஒளிபரப்பு..!

Singapore Firewalking Festival 2020
Singapore Firewalking Festival 2020 (Photo from YouTube/Hindu Endowments Board))

சிங்கப்பூரில் தீமிதித் திருவிழா நவம்பர் முதல் தேதி இன்று நடைபெறுகிறது. இது குறித்த அறிவிப்பை இந்து அறக்கட்டளை வாரியம் (HEB) முன்னர் அறிவித்தது.

கிருமித்தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக இந்த தீமிதித் திருவிழா சிறிய அளவில் நடைபெறும் என்று HEB முன்னர் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

குறிப்பிட்ட நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமானங்களின் கட்டணங்கள் உயர்வு.

ஊர்வலம் நடைபெறாது

இதில் பக்தர்கள் பங்கேற்பு மற்றும் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலிலிருந்து தொடங்கும் ஊர்வலமும் நடைபெறாது என்றும் அது தெரிவித்திருந்தது.

அதே போல சமய சடங்குகளில் முக்கிய பங்கு வகிப்போர், மகா பாரத கதைகளை ஏற்று நடிக்கும் தொண்டு ஊழியர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் கூறியிருந்தது.

இணையம் வழி ஒளிபரப்பு

இந்நிலையில், பக்தர்கள் இந்நிகழ்வை கண்டுமகிழ இணையம் வழியாக நேரடி ஒளிபரப்பிற்கும் அது ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்தது.

இந்த தீமிதித் திருவிழாவின் நேரடி ஒளிபரப்பை HEBஇன் முகநூல் பக்கம் மற்றும் YouTube வழியாகவும் காணலாம்.

இதில் காலை 5 மணிக்கு படுகளச் சடங்கு, 9.30 மணிக்கு பூக்குழி தயார் செய்யப்பட்டது. மேலும் பிற்பகல் 3 மணிக்கு சக்தி கரகம் நிகழ்வுகளை நேரடி ஒளிப்பரப்பில் நீங்கள் இணையம் வழியாக காணலாம்.

நேரடி ஒளிப்பரப்புகளை காண:

firewalking.sg

heb.org.sg

bit.ly/firewalking2020

சிங்கப்பூரில் 8,000 வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்கு 7 புதிய தங்கும் விடுதிகள்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…